Connect with us

Cricket

கிரிக்கெட்டில் ரோகித், விராட் கடவுள் மாதிரி.. ஆகாஷ் தீப்

Published

on

இந்திய கேப்டன் ரோகித் சர்மாவுக்கு இளம் வீரர் ஆகாஷ் தீப் பாராட்டு தெரிவித்துள்ளார். வேகப்பந்து வீச்சாளரான ஆகாஷ் தீப் இதுவரை விளையாடிய இரண்டு டெஸ்ட் போட்டிகளில் அபார பந்துவீச்சின் மூலம் அனைவரையும் கவர்ந்துள்ளார்.

உள்ளூர் கிரிக்கெட்டில் இருந்து தேசிய கிரிக்கெட் அணிக்காக விளையாடும் பயணம் மிகவும் அருமையாக இருந்ததாக ஆகாஷ் தீப் தெரிவித்துள்ளார். இந்திய அணியின் டிரெசிங் ரூம் கலாசாரம் தான் இதற்கு முக்கிய காரணம் என்றும் இதற்கு முழு பொறுப்பு கேப்டன் ரோகித் சர்மாவையே சேரும் என்றும் அவர் தெரிவித்தார்.

முன்னதாக ராஞ்சியில் இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் களமிறங்கிய ஆகாஷ் தீப் மூன்று விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார். அதன்பிறகு வங்கதேசம் அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் மூன்றாவது வேகப்பந்து வீச்சாளராக தேர்வு செய்யப்பட்டு இருந்த ஆகாஷ் தீப் இரண்டு விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தியிருந்தார்.

இந்த நிலையில், இந்தியா வங்கதேசம் அணிகள் இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி நாளை (செப்டம்பர் 27) துவங்க இருக்கும் நிலையில், ஆகாஷ் தீப் இந்திய அணியில் தனது சீனிர்கள் குறித்து கருத்து தெரிவித்து இருக்கிறார்.

“நான் இங்கு வந்த போது, வேறு மாதிரியான அர்ப்பணிப்பு மற்றும் கடின உழைப்பை வீரர்களிடம் பார்த்தேன். அதுவும் போட்டியில் லெஜண்ட் மற்றும் கடவுள் போன்ற அந்தஸ்தில் இருப்பவர்களான ரோகித் சர்மா மற்றும் விராட் பாய் போன்றவர்கள் கடின உழைப்பை கொடுக்கின்றனர்.”

“இவ்வளவு சாதனைகள் படைத்த பிறகும், அவர்கள் பயிற்சியின் போது இன்னும் கடினமாக உழைக்கின்றனர். அவர்களது மனஓட்டம் வேறு மாதிரி இருக்கிறது. அது என்னை இன்னும் கடினமாக உழைக்க உத்வேகம் அளிக்கிறது,” என்று ஆகாஷ் தீப் தெரிவித்தார்.

google news