latest news
இந்த நாலு மாவட்டத்துக்கு கன மழை…வானிலை ஆய்வு மையம் கொடுத்துள்ள எச்சரிக்கை…
தமிழகத்தில் வட-கிழக்கு பருவ மழை விரைவில் துவங்கலாம் என எதிர்பார்க்கப்பட்டு வருகிறது. வங்கக் கடலில் ஏற்பட்டுள்ள வளிமண்டல சுழற்சி காரணமாக தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் கன மழை முதல் லேசானது வரையிலான மழை அவ்வப்போது பெய்து வருகிறது.
குமரிக் கடல் மற்றும் தென் தமிழக கடலோர பகுதிகளைச் சார்ந்த மீனவர்கள் மீன் பிடிக்க கடலுக்குள் செல்ல வேண்டாம் எனவும் வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தியிருந்தது.
இந்நிலையில் தமிழகம், பாண்டிச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளுக்கான மழை குறித்த முக்கிய அறிவிப்பினை வெளியிட்டுள்ளது வானிலை ஆய்வு மையம்.
அதன்படி தமிழகத்தின் சில மாவட்டங்களில் இன்று மிகக் கனமழை பெய்யக்கூடும் எனவும், சில இடங்களில் கனமழை முதல் மிதமானது வரையிலான மற்றும் லேசானது வரையிலான மழை பெய்யக்கூடும் எனவும் வானிலை ஆய்வு மையத்தின் ஆய்வு அறிக்கை சொல்லியிருக்கிறது.
இதன்படி நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர் மற்றும் ஈரோடு ஆகிய நான்கு மாவட்டங்களில் மிகக் கனமழை பெய்யும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதே போல தமிழகத்தின் இதர மாவட்டங்களில் திண்டுக்கல், தேனி, சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், நாமக்கல், கரூர், மதுரை, சிவகங்கை, புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்யக் கூடும் எனவும் வானிலை ஆய்வு மையத்தின் ஆய்வு அறிக்கையில் சொல்லப்பட்டுள்ளது.
வெப்ப சலனத்தின் காரணமாக சென்னையின் சுற்று வட்டாரப்பகுதிகளில் இன்று லேசான மழை பெய்தது. இதனால சென்னையின் ஒரு சில இடங்களில் குளிர்ச்சியான சூழல் நிலவியது.