Connect with us

india

இந்தப் பிறப்புதான் நல்ல ருசிச்சு சாப்பிட கிடைச்சது… இன்று உலக பிரியாணி தினம்… அதன் வரலாறு பாப்போமா…?

Published

on

இன்று உலகம் முழுவதும் பிரியாணி தினம் கொண்டாடப்பட்ட வருகின்றது. இந்த பிரியாணி தினத்தை முன்னிட்டு அதன் வரலாற்றை நாம் தெரிந்து கொள்வோம்.

ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் மாதம் 11-ம் தேதி உலகம் முழுவதும் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகின்றது. உலகம் எங்கும் இருக்கும் மக்கள் பல்வேறு நாடுகளிலும், பிராந்தியங்களிலும் சிக்கன், மட்டன், மீன், காய்கறிகள், காளான் உள்ளிட பல்வேறு வகையான பிரியாணிகளை சமைத்து விரும்பி உணவாக சாப்பிடுவார்கள்.

இந்தியாவிலும் பிரியாணிக்கு என தனி மவுசு இருக்கின்றது. அரிசி மற்றும் இறைச்சி உணவான பிரியாணியின் பிறப்பிடம் ஈரான் தான். இங்கு தான் முதன்முதலில் பிரியாணி உருவானது. அதன் பிறகு அந்த உணவுப் பழக்கம் இந்தியா முழுவதும் பரவியது. இந்தியாவின் ஒவ்வொரு பகுதியிலும் பிரியாணியின் சுவையில் வித்தியாசமான அனுபவங்களை உணவு பிரியர்கள் பெறுகிறார்கள்.

ஒவ்வொரு பகுதியிலும் அதன் கலாச்சாரம் மற்றும் மசாலா பொருட்கள் போன்றவற்றின் மூலமாக பிரியாணியின் சுவை சற்று வேறுபடுகின்றது. இருப்பினும் இது ஒரு ருசியான உணவு. உலகம் எங்கிலும் இந்த உணவை உணவு பிரியர்கள் ரசித்து ருசித்து சாப்பிட்டு வருகிறார்கள்.

இந்தியாவிற்கு பிரியாணி வந்த வரலாறு எப்படி தெரியுமா?

முகலாயர் ஆட்சி காலத்தில் இந்தியாவிற்குள் பிரியாணி வந்ததாக கூறப்படுகின்றது. ஈரான் மற்றும் அதன் உட்பட்ட மத்திய கிழக்கு வளைகுடா நாடுகளில் இருந்து வணிகத்திற்காக இந்தியாவிற்கு வந்தவர்கள் பிரியாணி உணவை இங்கு அறிமுகம் செய்திருப்பதாக வரலாறுகள் கூறுகின்றன. பிரியாணியில் பல வகை உள்ளது.

ஹைதராபாத் பிரியாணி , சிந்தி பிரியாணி, டெல்லி பிரியாணி, தலச்சேரி பிரியாணி, லக்னோவி பிரியாணி, கொல்கத்தா பிரியாணி என பல வகையான பிரியாணிகளை நாம் கூறிக் கொண்டே போகலாம். தமிழகத்திலேயே பிரியாணியை பல வகையாக பிரித்து மக்கள் விருப்பமுடன் உண்டு வருகிறார்கள். இந்தியாவில் பெரும்பாலும் ஹைதராபாத் பிரியாணி என அழைக்கப்படும் பாஸ்மதி அரிசி, இறைச்சி மற்றும் சிறப்பு மசாலா பொருட்களுடன் தயாரிக்கப்படும் பிரியாணியை விரும்பி சாப்பிடுவார்கள்.

google news