Connect with us

Cricket

அந்த வீரர் ஓய்வு பெறுவது தான் நல்லது… ஓப்பனாக சொன்ன ரோகித் சர்மா… யார சொல்றாரு தெரியுமா..?

Published

on

நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடர் தொடர்பாக ரோஹித் சர்மா கொடுத்த பேட்டியானது தற்போது வைரலாகி வருகின்றது.

இந்தியா வந்திருக்கும் நியூசிலாந்து அணி அடுத்ததாக மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது. இந்த தொடர் நாளை தொடங்க உள்ளது. முதல் டெஸ்ட் போட்டி பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடைபெறும். ஏற்கனவே இந்தியா அணி நியூசிலாந்துக்கு எதிரான மூன்று டெஸ்ட் போட்டியிலும் வெற்றி பெற்றதால் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடருக்கு சுலபமாக முன்னேறிவிட்டது.

நியூசிலாந்து டெஸ்ட் அணி சமீபத்தில் இலங்கையை சமாளிக்க முடியாமல் இரண்டு போட்டிகளிலும் தோற்று சொதப்பியது. இதனால் இந்திய அணி நிச்சயம் தற்போது நடைபெறவிருக்கும் மூன்று போட்டிகளிலும் வெல்லும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. நியூசிலாந்து டெஸ்ட் தொடருக்கு முன்பு இந்தியாவின் கேப்டனான ரோகித் சர்மா பத்திரிக்கையாளர்களை சந்தித்தார்.

அப்போது பேசிய அவர் பல விஷயங்களை பகிர்ந்து கொண்டார். அந்த சமயத்தில் முகமது சமி எப்போது அணிக்கு திரும்புவார் என்று கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதில் அளித்த ரோகித் சர்மா ஆஸ்திரேலியா டெஸ்ட் தொடரில் முகமது சமியை சேர்க்க முடியாது. ஏனென்றால் அவரது கால் முட்டியில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. மீண்டும் பிரச்சனை ஏற்பட்டுள்ளதால் அவர் முட்டி வீங்கி இருக்கின்றது. இது அவருக்கு பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.

மீண்டும் அவர் முதலில் இருந்து ஆரம்பிக்க வேண்டும். முகமது சமி தற்போது பெங்களூர் தேசிய கிரிக்கெட் அகாடமியில் சிகிச்சை பெற்று வருகின்ற சமியை நாங்கள் மேலும் சிரமப் படுத்த விரும்பவில்லை. அவர் முழுமையாக குணமடைய வேண்டும் என்று கூறியிருந்தார்கள். இந்நிலையில் ஒரு நாள் உலகக்கோப்பை முடிந்த பிறகு முகமது சமிக்கு காலில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.

அதன் பிறகு சமி முழு பிட்னஸை மீண்டும் பெற்று பெங்களூர் தேசிய கிரிக்கெட் அகாடமியில் பயிற்சி மேற்கொள்ள ஆரம்பித்த இந்நிலையில் மீண்டும் சமிக்கு அதே இடத்தில் வலி ஏற்பட்டுள்ளதால் வீங்க ஆரம்பித்திருப்பதாகவும், வீக்கம் குறைந்த பிறகு ரெஸ்ட் எடுத்துவிட்டு முழு பார்மில் வந்து விளையாட ஆரம்பிப்பதற்கு சில காலம் ஆகும் என்பதால் சமி ஓய்வை அறிவித்துவிட்டு ஐபிஎல்-ல் விளையாடுவது சிறப்பாக இருக்கும் என்று கிரிக்கெட் விமர்சகர்கள் தொடர்ந்து கருத்து கூறி வருகிறார்கள்.

ஏற்கனவே முகமது சமிக்கு 34 வயதாகி விட்டது. தற்போது வரை அவர் 64 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 229 விக்கெட்டுகளை பெற்றிருக்கின்றார். 101 வது ஒரு நாள் போட்டியில் 195 விக்கெட்டுகளையும்,  டி20 போட்டிகளில் 24 டிக்கெட்டுகளையும் வீழ்த்தியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இருப்பினும் அவர் உடல்நிலை சரியில்லாமல் இருப்பதால் அவர் ஓய்வை அறிவித்து விடுவது தான் நல்லது என்று கிரிக்கெட் விமர்சகர்கள் பலரும் கூறி வருகிறார்கள்.

google news
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *