Finance
குறைந்த பிரீமியம்…அதிக பலன்…மத்திய அரசின் ஜீவன் ஜோதி திட்டம்…
பொதுத்துறை நிறுவனங்கள், தனியார் நிறுவனங்கள் காப்பீட்டு திட்டங்களை அறிமுகப்படுத்தி, ஒருவரின் முதலீட்டை பொருத்து அவரது குடும்பத்தினருக்கு முதலீட்டாளரின் மரணத்திற்கு பிறகும், பாலிசி காலம் முடிவடைந்த பின்னரும் காப்பீட்டு செய்யப்பட்ட தொகை மற்றும் அதன் பலன்களோடு விடுவித்து அவர்களது நாமினிகளிடம் ஒப்படைத்து வருகிறது.
இதற்காக வித விதமான பிரீமியம் திட்டங்களையும், பணம் செலுத்தும் முறைகளையும் நடைமுறைப் படுத்தியும் வருகின்றன காப்பீட்டு நிறுவனங்கள்.
ஓராண்டிற்கான மிக எளிய பிரிமீயம் தொகையை நிர்ணயித்து இரண்டு லட்சம் ரூபாய் காப்பீட்டுத் தொகையினை வழங்குகிறது மத்திய அரசின் பிரதான் மந்திரி ஜீவன் ஜோதி பீமா யோஜனா திட்டம்.
வங்கிகள் மற்றும் அஞ்சல் நிலையங்களில் கணக்கு வைத்திருக்கும் சந்தாதாரர்களின் ஒப்புதலைப் பெற்று அவர்களது கணக்கிலிருந்து தானாக பற்று வைக்கக் கூடிய ஆட்டோ டெபிட் முறையும் இந்த திட்டத்தில் இருக்கிறது. எந்த காரணத்திற்காகவும் மரணத்தை மறைக்கும் இந்த திட்டத்திற்கு மிகக் குறைந்த அளவிலான ஆண்டு பிரீமியம் நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது.
பதினெட்டு வயது முதல் ஐம்பது வயதிற்குட்பட்ட அனைத்து சந்தாதாரர்களுக்கும் இரண்டு லட்ச ரூபாய் (ரூ.2,00,000/-) ஒரு வருட கால வாழ்நாள் காப்பீட்டை வழங்குகிறது. இந்த திட்டத்தில் சேர்வதற்கான தகுதியாக சொல்லப்படுவது, விண்ணப்பதாரர் பதினெட்டு வயது முதல் ஐம்பது வயதுக்கு உட்பட்டவராகவும், தனிப்பட்ட வங்கி அல்லது தபால் அலுவலகத்தில் கணக்கு வைத்திருப்பவராக இருத்தல் வேண்டும்.
இந்த திட்டத்தில் தங்களை இணைத்துக் கொள்ளும் சந்தாதாரர் ஒரு ஆண்டிற்கு நானூற்றி ரூபாயை மட்டுமே பிரீமியம் தொகையாக கட்டினால் போது எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஆண்டுதோறும் புதுப்பிக்கும் வகையில் இந்த திட்டமானது மத்திய அரசால் அறிவிக்கப்பட்டது.