cinema
பாரதிராஜாவிடமிருந்து பறிபோன படங்கள்…விடாமல் பிடித்துக் கொண்ட விஜயகுமார்!…
தமிழ் சினிமாவில் எந்த விதமான கேரக்டர்கள் கொடுக்கப்பட்டாலும் அதனை தனது வேற லெவல் ஆக்டிங்கின் மூலம் வெற்றியடையச் செய்து வருபவர் நடிகர் விஜயகுமார். கதாநாயகனாக, வில்லனாக, காமெடி கலந்த குணச்சித்திர நடிகராக, இன்னும் சொல்லப்போனால் படத்தில் சில நிமிடங்களே மட்டும் வந்து போககூடிய கெஸ்ட் ரோல்களாக இருந்தாலும் தனது நடிப்பினால் முத்திரையை பதித்து விடுவார் இவர்.
கே.எஸ். ரவிக்குமார் இயக்கிய “நாட்டாமை” படம் மிகப்பெரிய ஹிட் படமாக அமைந்தது, அந்த படத்தின் ஹீரோ சரத்குமாரின் கேரியரில். “நாட்டாமை” படத்தில் ஒரு சில நிமிடங்கள் மட்டுமே வரக்கூடிய காட்சியில் நடித்திருப்பார் விஜயகுமார்.
மனோரமாவும் இவரும் போட்டி போட்டு நடித்திருப்பர் அந்த காட்சிகளில். ‘நேர்ம’ டா, ‘நீதி’ டா, ‘நியாயம்’ டா என ஆக்ரோஷம் பொங்க இவர் பேசிய வசனங்கள் இன்று பார்த்தாலும் கவர்ந்திழுக்கும்.
விஜயகுமார் நடித்த கதாப்பாத்திரத்தில் நடிக்க முதலில் நடிகர் சிவாஜியை தனது மனதில் நினைத்து வைத்திருக்கிறார் படத்தின் இயக்குனர் கே.எஸ்.ரவிகக்குமார்.
சிவாஜியின் உடல் நிலையின் காரணமாக அவர் இந்தப் படத்தில் நடிக்க முடியாமல் போனதாம். அடுத்த தேர்வாக கே.எஸ்.ரவிக்குமாரின் மனதில் இருந்தது இயக்குனர் பாரதிராஜா. “சேரன் பாண்டியன்” படத்தில் விஜயகுமார் நடித்திருந்த கேரக்டரில் நடிக்க இயக்குனர் பாரதிராஜாவைதான் அணுகியிருக்கிறார்.
பாரதிராஜாவோ தனக்கு இயக்கம் மட்டும் போதும், நடிப்பதில் ஆர்வம் இல்லை எனச் சொல்லியிருக்கிறார். அதே போல “நட்புக்காக” படத்திலும் விஜயகுமார் நடித்திருந்த கதாப்பாத்திராத்தில் பாரதிராஜாவை நடிக்க வைக்க நினைத்திருக்கிறார் படத்தின் இயக்குனர். ஆனால் பாரதிராஜாவின் சம்மதம் கிடைக்காததால் விஜயகுமார் நடிக்க வைக்கப் பட்டிருக்கிறார்.
பாரதிராஜா நடிக்க மறுத்த “சேரன் பாண்டியன்”, “நாட்டாமை”, “நட்புக்காக” ஆகிய மூன்று படங்களுமே தமிழ் சினிமா வரலாற்றில் வேற லெவல் ஹிட் ஆனவை. இவற்றில் நடித்ததன் மூலம் விஜயகுமாருக்கென தனி ரசிகர் கூட்டமே உருவெடுத்திருக்கிறது. அப்போது கே.எஸ். ரவிக்குமார் கொடுத்த வாய்ப்புகளை தவிர்த்த இயக்குனர் பாரதிராஜா, இப்பொதெல்லாம் படங்களில் நடித்து வருகிறார்.