Connect with us

Cricket

தென்னாப்பிரிக்கா, நியூஸிலாந்து சாம்பியன் யார்?…நாளை பலப்பரீட்சை!…

Published

on

South Africa West Indies

பெண்களுக்கான இருபது ஓவர் உலகக் கோப்பை போட்டி தொடர் ஐக்கிய அரபு எமீரகத்தில் வைத்து நடந்து வருகிறது. இந்த தொடர் இறுதி கட்டத்தினை எட்டியுள்ளது. இரண்டு அரை இறுதிப் போட்டிகளும் நிறைவடைந்து, சாம்பியன் ஷிப் பட்டத்திற்கு போட்டி போட இறுதிப் போட்டியில் விளையாடயிருக்கும் இரண்டு அணிகள் எது எது என்பது உறுதியாகி விட்டது. நாளை இரவு துபாயில் இறுதிப்போட்டி நடைபெற உள்ளது.

க்ரூப் – ஏ விலிருந்து ஆஸ்திரேலியாவும், நியூஸிலாந்து அணியும், க்ரூப் – பி யிலிருந்து தென்னாப்பிரிக்காவும், வெஸ்ட் இன்டீஸ் அணியும் அரை இறுதிச் சுற்றிற்கு தகுதி பெற்றிருந்தன பெண்களுக்கான இருபது ஓவர் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரில். கோப்பை வெல்லக்கூடிய ஃபேவரட்ஸ் என அதிகம் எதிர்பார்க்கப்பட்ட ஆஸ்திரேலிய அணியை தனது அபாரமான விளையாட்டின் மூலம் தொடரை விட்டே வெளியேற்றி விட்டது தென்னாப்பிரிக்கா நேற்று முன் தினம் நடந்து முடிந்த முதல் அரை இறுதிப் போட்டி.

இந்நிலையில் நேற்று இரவு துபாயில் நடந்து முடிந்த இரண்டாவது அரை இறுதிப் போட்டியில் நியூஸிலாந்து அணியும், வெஸ்ட் இண்டீஸ் அணியும் மோதின. முதலில் பேட்டிங் செய்த நியூஸிலாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட இருபது ஓவர்களில் ஒன்பது விக்கெட்டுகளை இழந்து 128 ரன்களை எடுத்தது.

World Cup

World Cup

அந்த அணியின் பில்மர் அதிகபட்சமாக 33 ரன்களை எடுத்திருந்தார். வெஸ்ட் இண்டீஸ் தரப்பில் டாட்டின் நான்கு விக்கெட்டுகளை எடுத்தார். 129  ரன்களை எடுத்தால் இறுதிப்போட்டியில் வாய்ப்பு என்ற நிலையில் தனது பேட்டிங்கை துவங்கியது வெஸ்ட் இண்டீஸ்.

இருபது ஓவர்கள் விளையாடி 8 விக்கெட்டுகளை இழந்து 120 ரன்களை மட்டுமே எடுத்து தோல்வியைத் தழுவியது வெஸ்ட் இண்டீஸ். அந்த அணியின் டாட்டின் மாடும் நிலைத்து நின்று ஆடி 33 ரன்களை குவித்தார். நியூஸிலாந்து அணியின் கார்சன் 3 விக்கெட்டுகளையும், கேர் 2 விக்கெட்டுகளையும் எடுத்திருந்தனர்.

இறுதிப் போட்டியில் தென்னாப்பிரிக்காவும், நியூஸிலாந்து மோதப்போவது உறுதியாகி விட்ட நிலையில். சாம்பியன் பட்டத்தை யார் வெல்லப் போகிறார் என்ற எதிர்ப்பார்ப்பும் அதிகரித்து வருகிறது.

இந்தியாவிற்கு எதிராக இறுதிப் போட்டியில் தோல்வியடைந்து உலக சாம்பியன் பட்டத்தை தவற விட்ட தென்னாப்பிரிக்க ஆண்கள் கிரிக்கெட் அணியைப் போல் இல்லாமல் வென்று சாதனை படைப்பார்கள் தென்னாப்பிரிக்க பெண்கள் அணி என்ற நம்பிக்கையும் மேலோங்கியுள்ளது அரை இறுதியில் பலமிக்க ஆஸ்திரேலியாவை வீழ்த்திய காரணத்தினாலும் கூட.

google news