Cricket
முதல் உலகக் கோப்பையை வென்ற நியூசிலாந்து.. பரிசுத்தொகை அறிவித்த ஐசிசி.. எத்தனை கோடி தெரியுமா?
உலகக் கோப்பையை வெல்ல வேண்டும் என்ற நீண்ட கால கனவை நியூசிலாந்து அணி ஒருவழியாக நிறைவேற்றிக் கொண்டது. ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்ற மகளிர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் நியூசிலாந்து அணி சாம்பியன் பட்டம் வென்றுள்ளது. ஆண்கள் மற்றும் பெண்கள் என இருவித கிரிக்கெட்டிலும் நியூசிலாந்து வென்றுள்ள முதல் உலகக் கோப்பை இது ஆகும்.
நடந்து முடிந்து உலகக் கோப்பை தொடரில் மோசமான ஃபார்மில் தொடங்கிய போதிலும், நியூசிலாந்து அணி சாம்பியன் பட்டம் வென்று அசத்தியுள்ளது. துபாயில் நடைபெற்ற இறுதிப்போட்டியில் தென் ஆப்பிரிக்கா அணியை எதிர்கொண்ட நியூசிலாந்து அணி 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 14 ஆண்டுகளில் முதல்முறையாக நியூசிலாந்து அணி டி20 உலகக் கோப்பையை வென்றுள்ளது.
2009 ஆம் ஆண்டு நடைபெற்ற முதல் டி20 உலகக் கோப்பை தொடரில் நியூசிலாந்து அணி இரண்டாவது இடம் பிடித்த நிலையில் 2010 ஆம் ஆண்டு அரையிறுதி சுற்றுக்கு முன்னேற தவறியது. டி20 உலகக் கோப்பை 2024-ஐ வென்ற நியூசிலாந்து அணிக்கு சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலான ஐசிசி பரிசுத்தொகை அறிவித்து இருக்கிறது. சாம்பியன் பட்டம் வென்ற நியூசிலாந்து அணிக்கு இந்திய மதிப்பில் ரூ. 19.6 கோடி வழங்கப்படுகிறது.
இரண்டாவது இடம் பிடித்த தென் ஆப்பிரிக்கா அணிக்கு ரூ. 9.8 கோடி வழங்கப்படுகிறது. ஐசிசி அறிவித்த ஒட்டுமொத்த பரிசுத் தொகையாக ரூ. 66.5 கோடி வழங்கப்படுகிறது. இது கடந்த ஆண்டு உலகக் கோப்பையை வென்ற அணிக்கு வழங்கப்பட்ட பரிசுத் தொகையை விட 225 சதவீதம் அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.