Cricket
18-வது இரட்டை சதம்… ஜாம்பவான்களின் பட்டியல் வரிசையில் இணைந்த புஜாரா…!
18-வது முறையாக இரட்டை சதம் அடித்து புஜாரா சச்சின், பிராட்மேன் போன்ற ஜாம்பவான் பட்டியலில் இணைந்திருக்கின்றார்.
90-வது ரஞ்சி கோப்பை கிரிக்கெட் போட்டி பல இடங்களில் நடந்து வருகின்றது. இதன் எலைட் பிரிவில் 32 அணிகள் 4 பிரிவுகளாக பிரிக்கப்பட்டு போட்டி நடைபெற்று வருகின்றன. இதில் இரண்டாவது லீக்காட்டம் ஒன்றில் சௌராஷ்ட்ரா சத்தீஸ்கர் அணிகள் மோதிக்கொண்டது. சதீஷ்கர் அணி முதல் இன்னிங்ஸில் ஏழு விக்கெட்டுக்கு 578 ரன்கள் குவித்தது. முதல் இன்னிங்ஸ் தொடங்கிய சவுராஷ்டிரா அணி மூன்றாவது நாள் முடிவில் இரண்டு விக்கெட்டுக்கு 177 ரன்கள் எடுத்திருந்தது.
புஜாரா 75 ரன்னுடனும், ஷெல்டன் 57 ரன்னுடனும் களத்தில் இருந்தார்கள். நேற்று நான்காவது மற்றும் கடைசி நாள் ஆட்டம் தொடங்கியது. அப்போது பேட்டிங் செய்த புஜாரா சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருக்கின்றார். அவருடன் இணைந்து விளையாடிய ஷெல்டன் 62 ரன்களில் ஆட்டம் இழந்தாலும் மறுமுனையில் நிலைத்து நின்ற புஜாரா இரட்டை சதம் விலாசினார். அவருக்கு ரஞ்சி போட்டியில் 9-வது இரட்டை சதமாகவும், முதல் தர கிரிக்கெட்டில் 18வது இரட்டை சதமாகவும் இது பதிவானது.
முதல் தர கிரிக்கெட்டில் அதிக இரட்டை சதங்களை அடித்தவர்களின் பட்டியலில் புஜாரா நான்காவது இடத்தை பிடித்திருக்கின்றார். இதில் முதலிடத்தில் ஆஸ்திரேலியாவின் டான் பிராட்மேன் 37 இரட்டை சதங்களுடன் முதலிடத்திலும், இங்கிலாந்தின் வாலி ஹேமந்த் 36 இரட்டை சதங்களுடன் இரண்டாம் இடத்திலும் இருக்கின்றார். ஹான்ட்ரஸன் 22 முறை இரட்டை சதங்கள் அடித்து மூன்றாவது இடத்தில் இருக்கின்றார்.
அத்துடன் புஜாரா முதல் தர கிரிக்கெட்டில் 21,000 எடுத்து இருக்கின்றார். கவாஸ்கர், டெண்டுல்கர், டிராவிட் ஆகியோருக்கு பிறகு இந்த மைல்களை எட்டிய 4-வது இந்திய வீரர் என்ற பெருமையை புஜாரா பெற்றிருக்கின்றார். 36 வயதாகும் புஜாரா 234 ரன்கள் எடுத்துள்ளார். அப்போது சௌராஷ்ட்ரா அணி 137.3 ஓவர்களில் 8 விக்கெட்டுக்கு 478 ரன்கள் எடுத்திருந்தது. இந்த ஆட்டம் இரு அணி கேப்டன்கள் சம்மதத்துடன் ட்ராவில் முடிந்தது. முதல் இன்னிங்ஸ் முடியாததால் இரு அணிகளும் தலா ஒரு புள்ளிகளை பெற்றிருக்கிறார்கள்.