Finance
இது வாங்குனா அது ஃப்ரீ!…ஆச்சரியமூட்டும் அறிவிப்பை வெளியிட்ட நிறுவனம்!…
வாடிக்கையாளர்களை கவர்ந்திழுக்க நிறுவனங்கள் பல விதமான ஆஃபர்களை அறிவித்து அதன் மூலம் விற்பனையை பெருக்குவதோடு தங்களது தயாரிப்புகளை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்லும் வேலைகளில் ஈடுபட்டு வருகின்றார்கள்.
புதிதாக களம் காணும் நிறுவனமாக இருந்தாலும் சரி, எத்தனை வருடங்கள் அதே துறையிலேயே இருந்து வரும் நிறுவனமுமாக இருந்தாலும் சரி சலுகைகளை அறிவித்து வியாபாரத்தை பெருக்குவதை உள் நோக்கமாக கொள்வதோடு மட்டுமல்லாமல் தங்களது நிறுவனத்தையும், தங்களையும் நம்பி வரும் வாடிக்கையாளர்களை திருப்திபடுத்துவதை நோக்கமாக கொண்டே செயல்பட்டு வருகின்றார்கள்.
அ நேகமாக ஆஃபர்கள் அறிவிக்கப்படுவது இப்போது வணிகத்தில் சகஜமாகி விட்டது. பங்குச் சந்தையிலும் இப்படிப் பட்ட ஆச்சர்யப்படும் விதமான அறிவிப்பை வெளியிட்டுள்ளது ‘ஈஸி ட்ரிப் பிளானர்ஸ் லிமிடெட்’
பயண சேவைத் துறை நிறுவனமான இந்நிறுவனம் தனது முதலீட்டாளர்களுக்கு பம்பர் சலுகையை அறிவித்துள்ளது. ஸ்மால் கேப் நிறுவன வாரியல் 1 : 1 என்ற விகிதத்தில் போனஸ் பங்குகளை வழங்குவதற்கான ஒப்புதலை வழங்கியிருக்கிறது.
இந்த நிறுவனத்தின் பென்னி பங்குகள் ஐம்பது ரூபாய்க்கும் குறைவானவைகளாக இருக்கிறது. சில காலத்திற்கு முன்னர் தொடர் நஷ்டத்தில் வர்த்தகமாகி வந்தது இந்நிறுவனம்.
தனது விகிதத்தை அதிகரித்துள்ள இந்த கம்பெனி ஒவ்வொரு பங்கிற்கும் மற்றொரு பங்கை போனஸாக அதாவது ஒன்றிற்கு ஒன்றை இலவசமாக தருவதாக சொல்லியிருக்கிறது. இந்த செய்திக்கு பிறகு ட்ரிப் பங்கு முதலீட்டாளர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
பதிவு தேதியில் பங்குதாரர்கள் தங்கள் டிமேட் கணக்கில் வைத்திருக்கும் ஒவ்வொரு 1 ஈக்விட்டி பங்கிற்கும், போனஸ் வடிவில் மற்றொரு ஈக்விட்டி பங்கு இலவசமாக வழங்கப்படுகிறது.
இந்த போனஸ் பங்குகளை வழங்குவதற்கு தகுதியான முதலீட்டாளர்களை தீர்மானிக்க ஒரு பதிவு தேதியை விரைவில் அறிவிக்கும் என்று நிறுவனம் தெரியப்படுத்தியுள்ளது. பதிவு தேதியில் தங்கள் டிமேட் கணக்கில் பங்குகளை வைத்திருப்பவர்கள் மட்டுமே இந்த போனஸ் பங்குகளைப் பெற தகுதியுடையவர்கள் என்று பங்குச் சந்தை தாக்கல் செய்த அறிக்கையில் தெரிவித்துள்ளது.