எலும்புகளை பலப்படுத்தி ஒரு ஆரோக்கியமான வாழ்வை வாழ வேண்டும் என்பது எல்லோருடைய கனவாக இருக்கும். அந்த எலும்புகளை பலப்படுத்த எளிமையாக கிடைக்க கூடிய அருமருந்துகளில் ஒன்று பாதாம் பிசின். இதனை இயற்கை குளிரூட்டி என்று கூட சொல்லலாம்.
பொதுவாக பாதாம் பிசின் என்றாலே உடல் சூட்டை குறைக்க உதவும் என்றுதான் சொல்வார்கள். ஆனால் அதையும் தாண்டி அதில் பல வகையான ஊட்டச்சத்துக்களும் நிறைந்துள்ளது. மனித உடல் உறுப்பில் மிக மிக முக்கியமானது எலும்பு மண்டலம் தான். இன்று இளம் வயதினருக்கும் எலும்பு தேய்மானம் வருவது இயல்பாகிவிட்டது.
முன்பெல்லாம் 50,60 வயதை கடந்தவர்களுக்கு தான் இது போன்ற நோய்கள் வரும். இன்றைய காலகட்டத்தில் உணவு பழக்க வழக்கங்கள் காரணமாக இளம் வயதிலேயே சிலருக்கு எலும்பு சம்பந்தமான நோய்கள் வர ஆரம்பித்துள்ளது. அதை சரி செய்ய எந்த வகையான மருந்துகளை எடுத்துக் கொள்ள வேண்டும் என்று தான் மக்கள் செல்கிறார்களே தவிர எளிமையாக கிடைக்கக்கூடிய பாதாம் பிசின் போன்றவைகளை மக்கள் மறந்து விடுகிறார்கள்.
இன்றைக்கு ஆண் பெண் இருவருக்கும் பொதுவான ஏன் இன்றைக்கு விளையாட்டு துறையில் சிறந்த செயல்பட துடிக்கும் ஆண் பெண் இருபாலரும் தினசரி 10 கிராம் பாதாம் பிசின் சாப்பிடும் பழக்கத்தை வைத்துக் கொண்டால் மிகப்பெரிய அளவில் உடலில் ஏற்படும் மாற்றங்களை கவனிக்கலாம்.
எலும்புகள் உறுதியாவதை நாம் உணரலாம். இப்படி எளிதாக கிடைக்கக்கூடிய பாதாம் பிசின் போன்றவைகளை பயன்படுத்துவதன் மூலம் தேவையற்ற மருத்துவ செலவுகளை குறைப்பது மட்டுமின்றி முதுமையிலும் ஆரோக்கியமாக நம்மால் வாழ முடியும்.