Odi இல் இருந்து விடைபெறும் ரோகித், கோலி..? farewell ஏற்பாடு செய்த கிரிக்கெட் வாரியம்

இந்திய அணியின் ஆணிவேராக செயல்படுபவர்கள் விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா. ரன் மெஷின் என்று அழைக்கப்படும் விராட் கோலி இந்திய அணிக்காக பல ஆட்டங்களில் தனது அபாரமான திறமையை வெளிப்படுத்தி இந்திய அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்து சென்றுள்ளார்.

இந்திய அணிக்காக இவர் பெறாத கோப்பைகளே கிடையாது. இவர் பெறாத ஒரே கோப்பை ஐ பி எல் கோப்பை மட்டும் தான் இருந்தது அதுவும் 2025 இல் பெற்றுவிட்டார். உலகின் தலைசிறந்த பேட்ஸ்மேன் கோலி ஜாம்பவான் சச்சின் சாதனையை நெருங்கிக் கொண்டிருக்கிறார். உலகத்திலே 100 முறை 100 அடித்த ஒரே பேட்ஸ்மேன் சச்சின் தான்.

81 முறை 100 அடித்துள்ளார் விராட் கோலி. சச்சின் சாதனையை முறியடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் திடீரென டெஸ்ட் போட்டியில் இருந்து தனது ஓய்வை அறிவித்தார் விராட் கோலி. டி20 உலக கோப்பை வென்றவுடன் டி 20 இலிருந்தும் தனது ஓய்வை அறிவித்துவிட்டார் கோலி.

தற்போது ஒரு நாள் போட்டியில் மட்டும் விளையாடி வருகிறார். இதே போல் ரோகித் சர்மா கேப்டன்சியில் இந்தியா டி20 உலகக்கோப்பை, டெஸ்ட் சாம்பியன் போன்ற கோப்பைகளை வென்றுள்ளது. சமீபத்தில் டெஸ்டில் இருந்து ஓய்வு அறிவித்தார். டி20 உலக கோப்பை வென்றவுடன் அதிலிருந்தும் தனது ஓய்வு அறிவித்தார்.

இந்நிலையில் இந்த இரு நம்பிக்கை நட்சத்திரங்களுக்கும் farewell நடத்த ஆஸ்திரேலியா கிரிக்கெட் வாரியம் முடிவெடுத்துள்ளது. அக்டோபர் மாதம் ஒரு நாள் தொடருக்கான சுற்றுப் பயணத்தில் இந்தியா ஆஸ்திரேலியாவிற்க்கு செல்கிறது. அங்கு ரோஹித் சர்மாவுக்கும் கோலிக்கும் பிரியாவிடை நிகழ்ச்சி நடத்த அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் திட்டமிட்டு வருகிறது. ஒரு நாள் போட்டிகளிலும் இது அவர்களுக்கு கடைசி ஆஸ்திரேலியா சுற்றுப்பயணமாக அமையலாம் என கருதி இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

Leave a Comment