life style
வாட்டி வதைக்கும் வெயிலுக்கு பயன்படும் வெட்டிவேர்.. எப்படினு பார்ப்போமா?
இந்த காலகட்டத்தில் அடிக்கும் வெயிலில் நமது உடம்பில் உள்ள நீர்சத்து குறைந்து கொண்டே வருகிறது. நமது உடலின் நீர்சத்தை சமநிலையில் வைத்து கொள்ளாவிடில் து நமது உடலுக்கு பல தொந்தரவுகள் வரும். செயற்கை முறையில் செய்யப்படும் குளிரூட்டிகளை விட இயற்கையான குளிரூட்டிகளை பயன்படுத்துவது நமது உடலுக்கும் மனதிற்கும் நன்மை பயக்கும். அப்படிபட்ட ஒரு பொருளை பற்றி இப்போது நாம் பார்ப்போம். அப்படியான ஒரு பொருள் தான் வெட்டிவேர்.
பண்டைய காலத்தில் வெட்டிவேரை மிக சிறந்த ஒரு குளிரூட்டியாக பயன்படுத்தியுள்ளனர். வெட்டிவேரானது நல்ல வாசனையுடைய புல் வகையை சார்ந்தது. இதில் ஆண்டிஆக்ஸிடண்ட் எனும் வேதிபொருளின் சக்திநிலையமாக உள்ளது. இதில் ஜிங்க்(zinc) சத்துக்கள் அதிகமாக இருப்பதால் இது நமது உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை கொடுக்கிறது.
இதனுடைய குளிரூட்டும் தன்மையினால் இது ஒரு சிறந்த அழற்சி எதிர்ப்பு(Anti-inflammatory) பொருளாக பயன்படுகிறது. உடலில் ஏற்படும் தேவையில்லாத ஒவ்வாமையை குறைக்கிறது. மேலும் இதனை ஊற வைத்து தண்ணீர் குடிப்பதால் அதீத வெப்பத்தினால் கண்களில் ஏற்படும் சிவப்பு தன்மையை வராமல் தடுக்கிறது.
இதில் இரும்புசத்து, விட்டமின் -பி6, மாங்கனிசு போன்ற தாது பொருட்கள் உள்ளதால் இது நமது உடலில் இரத்த ஓட்டத்தை சீராக்குகிறது. இதை பயன்படுத்துவதால் துக்கமின்மை போன்ற பிரச்சினகளிலிருந்து நம்மை பாதுகாக்கிறது. மேலும் சிறுநீரக கல் போன்ற தொந்தரவுகளை வரவிடாமலும் தடுக்கிறது.
இந்த வெட்டிவேரை சர்பத் வடிவிலும் நாம் தினமும் அருந்தலாம் அல்லது நாம் அன்றாடம் குடிக்கும் நீரில் போட்டு வைத்தும் பருகலாம். மேலும் இதனை நாம் அன்றாடம் குளிப்பதற்கு கூட பயன்படுத்தலாம். இந்த வேரானது ஸ்க்ரப்(scrub) வடிவில் கடைகளில் கிடைக்கின்றன.எனவே இத்தனை பன்முகத்தன்மை கொண்ட இந்த வெட்டிவேரை நாம் தினமும் உபயோகித்து நம் உடலை பல்வேறு நோய்களில் இருந்து விலகியே இருக்குமாறு பார்த்துகொள்வோம்.