2026 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள தமிழக சட்டமன்றத் தேர்தல் களம் தற்போதே சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. ஆளும் திமுகவைத் தோற்கடிக்க வேண்டும் என்ற முனைப்பில் எதிர்க்கட்சிகள் பல்வேறு வியூகங்களை வகுத்து வரும் நிலையில், நடிகர் விஜய்யின் ‘தமிழக வெற்றிக் கழகம்’ (தவெக) எந்தக் கூட்டணியில் இணையும் அல்லது தனித்துப் போட்டியிடுமா என்ற எதிர்பார்ப்பு அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாக மாறியுள்ளது.
தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தவெக-வை இணைக்க பாஜக தீவிரம்
தமிழகத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணியை (NDA) வலுப்படுத்தி, ஆட்சியைப் பிடிக்கும் முனைப்பில் பாஜக தேசியத் தலைமை தீவிரமாகச் செயல்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக, இளைஞர்கள் மற்றும் குறிப்பிட்ட சமூக வாக்கு வங்கியைப் பெருமளவில் ஈர்க்கக்கூடிய விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தை, தங்கள் கூட்டணிக்குள் கொண்டு வரும் முயற்சிகளில் பாஜக இறங்கியுள்ளதாக அரசியல் விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர்.
பவன் கல்யாண் மூலமான சமரச முயற்சி: தவெக தலைவர் விஜய்யை தேசிய ஜனநாயகக் கூட்டணிக்குள் கொண்டு வருவதற்காக, ஆந்திரப் பிரதேச துணை முதல்வரும், ஜனசேனா கட்சியின் தலைவரும், பிரபல தெலுங்கு நடிகருமான பவன் கல்யாண் மூலம் திரைமறைவுப் பேச்சுவார்த்தைகள் நடைபெற்றதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. திரைப்படத் துறை சார்ந்த நட்பு மற்றும் அரசியல் அனுபவம் ஆகியவற்றின் அடிப்படையில் இந்த முயற்சி முன்னெடுக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.
கூட்டணி அமைப்பது தொடர்பாக பல்வேறு செய்திகள் உலா வரும் நிலையில், தவெக தரப்பில் இருந்து முன்வைக்கப்பட்டதாகக் கூறப்படும் சில நிபந்தனைகள் அரசியல் களத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளன.
தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இணைவதற்கு, 60-க்கும் மேற்பட்ட சட்டமன்றத் தொகுதிகள் ஒதுக்கப்பட வேண்டும் என்றும், கூட்டணி வெற்றி பெற்று ஆட்சியமைக்கும் பட்சத்தில் முதல் இரண்டரை வருடங்கள் விஜய்க்கு முதலமைச்சர் பதவி வழங்கப்பட வேண்டும் என்றும் தவெக நிபந்தனை விதித்ததாகச் செய்திகள் கசிந்துள்ளன.
இந்த நிபந்தனைகளை அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி திட்டவட்டமாக நிராகரித்து விட்டதாகக் கூறப்படுகிறது. தமிழகத்தின் பிரதான எதிர்க்கட்சியாகவும், வலுவான வாக்கு வங்கியையும் கொண்டுள்ள அதிமுக, முதலமைச்சர் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமியை முன்னிறுத்தியே தேர்தலைச் சந்திக்க விரும்புகிறது. எனவே, அதிகாரப் பகிர்வோ அல்லது இவ்வளவு பெரிய அளவிலான தொகுதிப் பங்கீடோ சாத்தியமில்லை என அதிமுக தரப்பில் உறுதியாகத் தெரிவிக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.
தவெக மற்றும் அதிமுக இடையேயான இந்த இழுபறி நிலைக்கு மத்தியிலும், கூட்டணியை எப்படியாவது சாத்தியப்படுத்த வேண்டும் என்பதில் பாஜக உறுதியாக உள்ளது. திமுகவுக்கு எதிரான வாக்குகள் அதிமுக, பாஜக மற்றும் தவெக எனப் பல முனைகளில் சிதறுவது திமுகவிற்கே சாதகமாக அமையும் என பாஜக கருதுகிறது.
இதனால், திமுகவை வீழ்த்தி என்.டி.ஏ கூட்டணி ஆட்சியை அமைக்க வேண்டும் என்ற ஒற்றை இலக்கிற்காக, எடப்பாடி பழனிசாமியைச் சமாதானப்படுத்தும் முயற்சிகளில் பாஜகவின் மூத்த தலைவர்கள் ஈடுப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. சில தொகுதிகளை விட்டுக்கொடுத்தோ அல்லது மாற்றுத் திட்டங்கள் மூலமாகவோ ஒரு சுமூகமான உடன்பாட்டை எட்ட திரைமறைவு காய்கள் நகர்த்தப்பட்டு வருகின்றன.
தற்போது எண்டிஏ கூட்டணி வென்றல் எடப்பாடி பழனிசாஅமி முதல்வ்ர் என்றும், விஜய் எத்ரிகட்சி தலைவர் என்றும் பேரம் சேப்படுவதாக உறுதிபடுத்தப்படாத தகவல்கள் கூறுகின்றன. எனினும் இதனை விஜய் ஏற்பாரா என்பது சந்தேகமே. காரணம் தனக்கு பெரிய செல்வாக்கு இருப்பதாகவும், தனித்து நின்றாலே நிச்சயம் அடுத்த முதல்வர் நாம் தான் என்ற கனவில் விஜய் உள்ளது தெரிகிறது. ஆனால் உண்மையில் விவகரத்து பிரச்சனை, த்ரிஷா விவகாரத்தால் விஜ்ய் செல்வாகு சரிந்துள்ளது என்றே தெரிகிறது.