Connect with us

latest news

யு.பி.ஐ. அக்கவுண்ட் ஆக்டிவேட் செய்வது இனி ரொம்ப ஈசி – கூகுள் பே புது அப்டேட்!

Published

on

g pay

கூகுள் பே சேவையில் யு.பி.ஐ. அக்கவுண்ட் ஆக்டிவேட் அல்லது உருவாக்குவது புதிய அப்டேட் மூலம் எளிமையாக்கப்பட்டு இருக்கிறது. யு.பி.ஐ. அக்கவுண்ட் செட்டப் செய்ய பயனர்கள் தங்களின் ஆதார் கார்டு பயன்படுத்தலாம் என்று கூகுள் நிறுவனம் அறிவித்து இருக்கிறது. மேலும் டெபிட் கார்டு பயன்படுத்தும் போது யு.பி.ஐ. பின் நம்பர் செட் செய்ய வேண்டிய அவசியமும் இல்லை.

“பல லட்சம் இந்திய பயனர்கள் யு.பி.ஐ. சேவையை பயன்படுத்தி வரும் நிலையில், இதன் மூலம் மேலும் பலர் யு.பி.ஐ. ஐடி செட்டப் செய்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன் மூலம் டிஜிட்டல் பேமண்ட் செய்வோர் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும். இந்த அம்சம் தற்போது குறிப்பிட்ட வங்கிகளில் வங்கி கணக்கு வைத்திருக்கும் வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்படுகிறது,” என கூகுள் நிறுவனம் தெரிவித்து இருக்கிறது.

g pay

g pay

இந்திய பயனர்களில் சுமார் 99.9 சதவீதம் பேர் ஆதார் நம்பர் வைத்துள்ளனர். மேலும் பலர் அதனை மாதம் ஒரு முறையேனும் பயன்படுத்தி வருகின்றனர். இதன் காரணமாகவே ஆதார் சார்ந்த வசதி யு.பி.ஐ. சேவையில் அறிமுகம் செய்யப்படுகிறது. இதன் மூலம் யு.பி.ஐ. சேவையை பயன்படுத்துவோர் எண்ணிக்கை தற்போது இருப்பதை விட மேலும் அதிகரிக்கும் என கூகுள் நிறுவனம் தெரிவித்துள்ளது.

g pay

g pay

புதிய ஆப்ஷன் மூலம் யு.பி.ஐ. சேவையில் இணைய விரும்பும் பயனர்கள் தங்களது மொபைல் நம்பர் ஆதார் எண் மற்றும் வங்கி கணக்குடன் இணைக்கப்பட்டு இருக்கிறதா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும். மேலும் பயனர்களின் வங்கி கணக்கு மற்றும் ஆதார் எண் இணைக்கப்பட்டு இருப்பதும் அவசியம் ஆகும். இவ்வாறு செய்த பின் பயனர்கள் தங்களின் கூகுள் பே யு.பி.ஐ. அக்கவுண்ட்-ஐ புதிய வசதி மூலம் ஆக்டிவேட் செய்து கொள்ளலாம்.

ஆக்டிவேட் செய்வது எப்படி? 

கூகுள் பே செயலியை டவுன்லோடு செய்து, டெபிட் கார்டு அல்லது ஆதார் சார்ந்த யு.பி.ஐ. ஆப்ஷன்களில் ஆதார் ஆப்ஷனை தேர்வு செய்ய வேண்டும்.

g pay

g pay

இனி ஆதார் நம்பரின் முதல் ஆறு இலக்கங்களை பதிவிட வேண்டும். இதனை வெற்றிகரமாக நிறைவு செய்ய யு.ஐ.டி.ஏ.ஐ. மற்றும் வங்கி சார்பில் அனுப்பப்பட்ட ஒ.டி.பி.-க்களை சரியாக பதிவிட வேண்டும்.

இதே போன்று வங்கிகள் சார்பிலும் இந்த வழிமுறை முடிக்கப்படும். பின் யு.பி.ஐ. பின் நம்பரை செட் செய்து கொள்ள வேண்டும்.

மேலே கொடுக்கப்பட்டு இருக்கும் வழிமுறைகளை நிறைவு செய்த பிறகு, பயர்கள் கூகுள் பே செயலி மூலம் பரிவர்த்தனைகள் மற்றும் வங்கி கணக்கில் இருக்கும் தொகை பற்றிய விவரங்களை அறிந்து கொள்ள முடியும்.

google news