Connect with us

latest news

ட்ரூகாலரில் கால் ரெக்கார்டிங் வசதி அறிமுகம் – எப்படி பயன்படுத்தனும் தெரியுமா?

Published

on

Truecaller-Call-Recording-Logo

ஏ.ஐ. எனப்படும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் சார்ந்து இயங்கும் கால் ரெக்கார்டிங் வசதி ட்ரூகாலர் சேவையில் அறிமுகம் செய்யப்பட்டது. புதிய கால் ரெக்கார்டிங் வசதி ஆண்ட்ராய்டு மற்றும் ஐபோன் பயனர்களுக்கு வழங்கப்படுகிறது. முதற்கட்டமாக அமெரிக்காவில் ட்ரூகாலர் சேவையை பயன்படுத்தும் பிரீமியம் பயனர்களுக்கு இந்த அம்சம் வழங்கப்படுகிறது.

விரைவில் உலகின் மற்ற நாடுகளிலும் இந்த அம்சம் படிப்படியாக அறிமுகம் செய்யப்படும் என்று அந்நிறுவனம் அறிவித்து இருக்கிறது. இருபுறமும் கால் ரெக்கார்டிங் வசதி மட்டுமின்றி, ட்ரூகாலர் சேவையில் கால் ரெக்கார்டிங்கை எழுத்துக்களாக மாற்றும் வசதியும் வழங்கப்படுகிறது. இவ்வாறு எழுத்துக்களாக மாற்றப்படும் தரவுகளை லார்ஜ் லாங்குவேஜ் மாடல் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி நேர்த்தியாக சர்ச் செய்யும் வசதியை வழங்குகிறது.

Truecaller-Call-Recording

Truecaller-Call-Recording

இந்த அம்சம் எப்படி இயங்குகிறது ?

ட்ரூகாலர் சேவையில் அழைப்புகளை ரெக்கார்டு செய்ய, செயலியில் வழங்கப்படும் பிரத்யேக ரெக்கார்டிங் லைனை, ரெக்கார்டு செய்ய வேண்டிய அழைப்புடன் இணைக்க வேண்டும். அழைப்பு நிறைவுற்றதும், ரெக்கார்டு செய்யப்பட்ட தரவு புஷ் நோட்டிஃபிகேஷன் மூலம் வழங்கப்படும்.

கால் ரெக்கார்டிங்கை துவங்குவது எப்படி ?

– ட்ரூகாலர் செயலியை திறக்க வேண்டும்.

– செயலியில் உள்ள ரெக்கார்டு எ கால் (Record a Call) பட்டனை க்ளிக் செய்ய வேண்டும்.

– அடுத்து கால் தி ரெக்கார்டிங் லைன் (Call the Recording Line) ஆப்ஷனை க்ளிக் செய்ய வேண்டும்.

– அழைப்புகளை ஒருங்கிணைக்க வேண்டும்.

அவுட்கோயிங் அழைப்புகளுக்கு இந்த வழிமுறை சற்றே வித்தியாசமானது ஆகும். ரெக்கார்டிங்களை எளிதில் இயக்குவதற்கான வசதி வழங்கப்பட்டு உள்ளது. அதன்படி பயனர்கள் ரெக்கார்டிங்கை: கேட்பது, ஃபைலின் பெயரை மாற்றுவது, பகிர்வது அல்லது டெலீட் உள்ளிட்டவைகளை மேற்கொள்ள முடியும். அனைத்து அழைப்புகளும் பயனர் சாதனங்களில் சேமிக்கப்படுகின்றன. இதனால் தனியுரிமை பாதுகாக்கப்படும் என்று அந்நிறுவனம் தெரிவித்து உள்ளது.

ஐபோன் பயனர்கள் கால் ரெக்கார்டிங்களை தங்களது ஐகிளவுட் ஸ்டோரேஜிலும், ஆண்ட்ராய்டு பயனர்கள் கூகுள் டிரைவிலும் பேக்கப் செய்வதற்கான வசதி வழங்கப்படுகிறது. எதிர்காலத்தில் ஏ.ஐ. சார்ந்து இயங்கும் ஏராளமான அம்சங்கள் செயலியில் சேர்க்கப்படும் என்று ட்ரூகாலர் தெரிவித்து உள்ளது.

google news