Connect with us

latest news

ஜியோவின் அடுத்த அதிரடி – வேண்டிய நம்பரை வாங்கிக்கோங்க – விலை தெரிஞ்சா ஷாக் ஆகிடுவீங்க!

Published

on

jio

இந்திய சந்தையில் முன்னணி டெலிகாம் நிறுவனமான ரிலையன்ஸ் ஜியோ பயனர்கள் தாங்கள் விரும்பும் மொபைல் நம்பரை தேர்வு செய்து கொள்ளும் வசதியை போஸ்ட்பெயிட் இணைப்பில் சாத்தியப்படுத்துகிறது. எனினும், இதில் ஒரு டுவிஸ்ட் உள்ளது. பயனர்கள் தாங்கள் விரும்பும் நான்கு இலக்க எண்களை மட்டும் தேர்வு செய்து கொள்ளலாம். ஜியோ போஸ்ட்பெயிட் இணைப்பை பெற விரும்பும் புதிய வாடிக்கையாளர்கள் ரிலையன்ஸ் ஜியோ அதிகாரப்பூர்வ வலைதளம் சென்று ஜியோ சாய்ஸ் நம்பர் (Jio Choice Number) ஆப்ஷனை பயன்படுத்த வேண்டும்.

ஜியோ தளத்தில் உள்ள ஏராளமான நம்பர்களில் பயனர்கள் விரும்பும் நான்கு இலக்க எண்களில் ஒன்றை தேர்வு செய்து கொள்ள முடியும். முதலில் பயனர்கள் ஒடிபி மூலம் லாக்-இன் செய்து பின் அவர்கள் விரும்பும் நான்கு இலக்க எண்ணை தேர்வு செய்ய வேண்டும். தற்போது இந்த வசதி ஜியோ போஸ்ட்பெயிட் சந்தாதாரர்களுக்கு மட்டுமே வழங்கப்படுகிறது. இதற்கு பயனர்கள் ஒரு முறை கட்டணமாக ரூ. 499 செலுத்த வேண்டும்.

Jio

Jio Digital

ரூ. 499 கட்டணம் செலுத்திய பின் புக்கிங் கோட் உருவாக்கப்பட்டு, சிம் ஆக்டிவேட் செய்ய ஜியோ முகவர் எப்போது வரவேண்டும் என்பதை குறிப்பிட வேண்டும். முழுமையான நம்பர் இல்லை என்ற போதிலும், இந்த அம்சம் ஜியோ மொபைல் நம்பரில் ஓரளவுக்கு கஸ்டமைசேஷன் வசதியை வழங்குகிறது. இதனை எப்படி செய்ய வேண்டும் என்பது பற்றி தொடர்ந்து பார்ப்போம்.

– ஜியோ வலைதளத்தில் ஜியோ சாய்ஸ் நம்பர் பக்கத்திற்கு செல்ல வேண்டும்.

– ஸ்டார்ட் பட்டனை க்ளிக் செய்ய வேண்டும்.

– ஒடிபி வெரிஃபிகேஷனுக்கு, தற்போது பயன்படுத்தி வரும் மொபைல் நம்பரை பதிவிட வேண்டும்.

– அடுத்த வலைப்பக்கத்தில் நீங்கள் விரும்பும் நான்கு இலக்க எண், உங்களின் பெயர் மற்றும் அஞ்சல் குறியீட்டு எண் உள்ளிட்டவைகளை பதிவிட வேண்டும்.

– நீங்கள் தேர்வு செய்து எண் கிடைக்காத பட்சத்தில், உங்களுக்கு பரிந்துரைக்கப்படும் இதர எண்களில் ஒன்றை தேர்வு செய்து கொள்ளலாம்.

– நம்பரை தேர்வு செய்தபின் அதன் அருகில் இருக்கும் புக் பட்டனை க்ளிக் செய்ய வேண்டும்.

– நம்பரை முன்பதிவு செய்ய ரூ. 499 கட்டணம் செலுத்த வேண்டும்.

– கட்டணம் செலுத்தியதும் டிக்கெட் கோட் உங்களுக்கு எஸ்எம்எஸ் வடிவில் அனுப்பப்படும்.

Jio

Jio

– ஜியோ முகவர் சிம் ஆக்டிவேட் செய்ய வரும் போது உங்களது புக்கிட் கோட்-ஐ அவரிடம் வழங்க வேண்டும்.

– புக் செய்ததில் இருந்து 15 நாட்களுக்குள் ஜியோ நம்பர் ஆக்டிவேட் செய்யப்பட்டு விடும்.

ஜியோ மட்டுமின்றி வி (வோடபோன் ஐடியா) நிறுவனம் இதே போன்ற சேவையை தனது பயனர்களுக்கு வழங்கி வருகிறது. வி நிறுவனம் போஸ்ட்பெயிட் மற்றும் பிரீபெயிட் இணைப்புகளில் விஐபி ஃபேன்சி நம்பர்கள் வழங்கி வருகிறது. பயனர்கள் இலவசமாக கிடைக்கும் எண்கள் மட்டுமின்றி, பிரீமியம் எண்களையும் கட்டணம் செலுத்தி வாங்கிக் கொள்ளும் வசதி வழங்கப்படுகிறது.

புதிய போஸ்ட்பெயிட் சலுகை தவிர ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் சமீபத்தில் தனது சொந்த விஆர் (விர்ச்சுவல் ரியாலிட்டி) ஹெட்செட்-ஐ ஜியோடைவ் எனும் பெயரில் அறிமுகம் செய்தது. இந்த ஹெட்செட் தற்போது நடைபெற்று வரும் ஐபிஎல் தொடரை முன்னிட்டு பயனர்கள் ஐபிஎல் போட்டிகளை ஜியோ சினிமா செயலியில் விஆர் ஹெட்செட் மூலம் கண்டுகளிக்கும் நோக்கில் அறிமுகம் செய்யப்பட்டது. ஜியோடைவ் விஆர் ஹெட்செட் ரூ. 1,299 விலையில் ஜியோ மார்ட் வலைதளத்தில் கிடைக்கிறது.

google news