Connect with us

latest news

கூகுளில் இப்படியொரு வசதியா? உங்க ஏரியா பெருமையை உலகத்துக்கே சொல்லலாம்.. எப்படி தெரியுமா?

Published

on

Google-Maps-Featured-img

உலகளவில் நேவிகேஷன் சேவையை வழங்குவதில் முன்னணியில் இருப்பது கூகுள் நிறுவனத்தின் கூகுள் மேப்ஸ் தான் எனலாம். பயணங்களின் போது, வழி தெரியாமல் தடுமாறி நிற்போருக்கு வழி காட்டுவது மட்டுமின்றி கூகுள் மேப்ஸ் செயலியில் ஏராளமான அம்சங்கள் வழங்கப்பட்டு உள்ளன. இவை பெரும்பாலும் பயணம் தொடர்பானவை என்பது குறிப்பிடத்தக்கது.

Google-Maps-Local-Guide

Google-Maps-Local-Guide

கூகுள் மேப்ஸ் வழங்கும் அம்சங்களை கொண்டு வழி தெரியாத பகுதிகளுக்கு சென்று வருவதோடு, போக்குவரத்து நெரிசல், குறிப்பிட்ட பகுதிகளுக்கான ரிவ்யூக்களை அறிந்து கொள்வது என கூகுள் மேப்ஸ் அம்சங்களின் பட்டியல் நீள்கிறது. கடைகள் திறந்து இருக்கும் நேரம் பற்றிய தகவல்கள், உணவகத்தில் கிடைக்கும் உணவு விவரங்கள், வீல்சேர் வசதி உள்ளதா என்று ஏராளமான விவரங்களை கூகுள் மேப்ஸ் வழங்கி வருகிறது.

Google-Maps-Local-Guide-1

Google-Maps-Local-Guide-1

இவ்வளவு விஷயங்களை கூகுள் மேப்ஸ் வழங்குவது ஒருபக்கம் இருந்தாலும், இந்த தகவல்களை கூகுள் நிறுவனத்திற்கு யார் வழங்குகின்றனர் என்று உங்களுக்கு தெரியுமா?

கூகுள் நிறுவனம் உலகம் முழுக்க செயல்படுத்தி வரும் அசத்தலான திட்டம் தான் லோக்கல் கைடு. இந்த திட்டம் கொண்டு கூகுள் சேவையை பயன்படுத்தும் யார் வேண்டுமானாலும் உள்ளூர் விவரங்களை கூகுளுக்கு தெரிவிக்க முடியும். கூகுள் லோக்கல் கைடு பற்றிய முழு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.

Google-Maps-Local-Guide-2

Google-Maps-Local-Guide-2

கூகுள் லோக்கல் கைடு திட்டம் :

கூகுள் லோக்கல் கைடு திட்டம் கொண்டு கூகுள் நிறுவனம் உள்ளூர் விவரங்களை அதன் பயனர்கள் மூலம் பெற்றுக் கொள்கிறது. கூகுள் பயனர்கள், தாங்கள் வசிக்கும் பகுதிகளில் செயல்பட்டு வரும் கடை, உணவகம் மற்றும் இதர சேவைகள் பற்றிய தகவல்களை கூகுளுக்கு லோக்கல் கைடு திட்டத்தின் மூலம் வழங்கி வருகின்றனர்.

உலகளவில் கூகுள் மேப்ஸ் சேவையை பயன்படுத்துவோர் தான் இந்த திட்டத்தின் உறுப்பினர்களாக உள்ளனர். இவர்கள் உள்ளூர் கடைகளின் விவரங்கள், முகவரி வழங்குவதோடு, அவை எப்படி சேவையை வழங்கி வருகின்றன என்பது பற்றி ரிவ்யூக்களையும் வழங்குவர். இதில் அதிக உண்மைத் தன்மை கொண்ட தகவல்கள், மற்ற பயனர்கள் கேள்விக்கு பதில் அளிப்பது, புகைப்படம், ரிவ்யூ போன்ற தரவுகளை லோக்கல் கைடுகள் வழங்கி வருகின்றனர். மேப்ஸ் சேவையில் ஏதேனும் தவறான தகவல் இருப்பின் அது பற்றி லோக்கல் கைடுகள் தகவல் தெரிவிக்கும் வசதியும் வழங்கப்பட்டு இருக்கிறது.

Google-Maps-Local-Guide-3

Google-Maps-Local-Guide-3

என்ன பயன்?

கூகுள் லோக்கல் கைடு திட்டத்தில் விவரங்களை வழங்கி வரும் லோக்கல் கைடுகளுக்கு கூகுள் நிறுவனம் ரிவார்டு புள்ளிகளை வழங்குவது, அவர்களின் லோக்கல் கைடு லெவல்களை அதிகப்படுத்துவது போன்றவற்றை பலன்களாக வழங்கி வருகிறது.

எப்படி செயல்படுகிறது?

நீங்கள் ஏதேனும் பகுதிக்கு சென்றுவந்தால் கூகுள் மேப்ஸ் சார்பில், அந்த பகுதி குறித்து கருத்து தெரிவிக்க நோட்டிஃபிகேஷன் அனுப்பப்படும். முதலில் ஸ்டார் ரேட்டிங் வழங்கி, அதன் பிறகு சற்றே கூடுதல் விவரங்களை பயனர்கள் வழங்க வேண்டும். இதில் புகைப்படம், வீடியோக்கள், நேரம் போன்ற தகவல்களை பயனர்கள் வழங்க முடியும். பயனர்கள் வழங்கும் தகவல்களோடு, கூகுள் தரப்பிலும் குறிப்பிட்ட பகுதி குறித்த கேள்விகள் கேட்கப்படுகின்றன.

Google-Maps-Local-Guide-4

Google-Maps-Local-Guide-4

இவ்வாறு தகவல்களை வழங்குவது, ரிவ்யூ கொடுப்பது மூலம் பயனர்கள் கூகுள் மேப்ஸ் சேவையின் லோக்கல் கைடு திட்டத்தில் புள்ளிகளை சேகரித்து அடுத்தடுத்த நிலைகளுக்கு செல்ல முடியும். குறிப்பிட்ட இலக்கை எட்டியதும், கூகுள் சார்பில் பயனர்களுக்கு பேட்ஜ், தள்ளுபடி வவுச்சர்கள், கூகுள் அம்சங்களை முன்கூட்டியே இயக்கி பார்க்கும் வசதி என ஏராளமான பலன்களை வழங்குகிறது.

Google-Maps-Local-Guide-5

Google-Maps-Local-Guide-5

கூகுள் மேப்ஸ்-இல் லோக்கல் கைடு ஆவது எப்படி?

– லோக்கல் கைடு திட்டம் உங்களுக்கு சிறப்பானதாக தோன்றினால், எப்படி லோக்கல் கைடு ஆக வேண்டும் என்பதை கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் வழிமுறைகளை பின்பற்றி அறிந்து கொள்ளுங்கள்.

– ஸ்மார்ட்போனில் கூகுள் மேப்ஸ் இன்ஸ்டால் செய்யப்படவில்லை எனில், அதனை முதலில் இன்ஸ்டால் செய்ய வேண்டும்.

– உங்களின் கூகுள் அக்கவுன்ட் மூலம் கூகுள் மேப்ஸ் சேவையில் சைன்-இன் செய்து கொள்ளுங்கள்.

– செயலியின் கீழ்புறம் உள்ள கான்ட்ரிபியுட் (Contribute) ஐகானை க்ளிக் செய்ய வேண்டும்.

– மேலே கொடுக்கப்பட்டு இருக்கும் ஆப்ஷன்களை க்ளிக் செய்ததும், நீங்களும் கூகுள் மேப்ஸ் லோக்கல் கைடு திட்டத்தின் உறுப்பினர் ஆகிவிடலாம்.

google news