Connect with us

latest news

தொழில் தொடங்கனும்னு ஆசை படுறீங்களா?..அப்போ இத தெரிஞ்சிகோங்க..

Published

on

PMMY

நாட்டில் உள்ள ஒவ்வொரு குடிமகனும் பயனடையும் வகையில் நமது மத்திய அரசானது பல்வேறு நலத்திட்டங்களை கொண்டு வந்துள்ளது. விவசாயிகள், பெண்கள், மாணவர்கள், வயதானவர்கள் என அனைவரும் நலன் பெறும் வகையில் பல திட்டங்களை உருவாக்கியுள்ளனர். அப்படிப்பட்ட திட்டங்கலில் ஒன்றுதான் பிரதான் மந்திரி முத்ரா யோஜனா(PMMY) எனும் திட்டம் ஆகும்.இத்திட்டமானது இந்திய பிரதமர் நரேந்திர மோடியால் 2016ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் (MSME) முனைவோர் இத்திட்டத்தின் கீழ் 10 லட்சம் வரை லோனாக எடுத்து பயனடையலாம்.

msme loan

msme loan

இத்திட்டத்தின் கீழ் இதுவரை 23.2 லட்சம் கோடி கடன் வழங்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தில் சிஷு(sishu), கிஷோர்(kishore), தருன்(tarun) என மூன்று வகையான கடன் திட்டங்கள் உள்ளன.

mudra category

mudra category

சிஷு திட்டத்தின் கீழ் ரூ. 50000 வரை கடனாக பெற்றுகொள்ளலாம். கிஷோர் திட்டத்தின் கீழ் ரூ. 50000- 5,00,000 வரை கடனாகவும் மேலும் தருன் திட்டத்தின் கீழ் ரூ. 5 லட்சம் முதல் ரூ. 10 லட்சம் வரையிலும் கடனாக பெற முடியும்.

பெரிய கார்பரேட் நிறுவனங்கள், காளான் பண்ணை, ஆட்டு பண்ணை போன்ற தொழில்களுக்கு இதன் மூலம் கடன் பெற முடியாது. உற்பத்தி,சேவை மற்றும் வியாபாரம் செய்பவர்கள் இதன் மூலம் பணம் பெறலாம்.  நாம் முதலீடு செய்யும் தொகை அதில் நாம் அடையும் லாபம் இவைகளை அடிப்படையாக கொண்டு வங்கியானது மேலே குறிப்பிட்ட மூன்று திட்டங்களிலிருந்து நமக்கு கடன் வழங்குவர். மேலும் நாம் செய்யும் சிறு தொழிலை விரிவுபடுத்தவும் இதன் மூலம் கடன் பெறலாம். இந்த திட்டத்தின் மிக முக்கியமான சிறப்பம்சம் இதன்மூலம் கடன் வாங்குவோர் பிணையமாக எதையும் சமர்பிக்கவேண்டியது இல்லை.

இத்திட்டத்தின் கீழ் கடன் வாங்குவோர் 12% வட்டி கட்ட வேண்டும். இந்த கடனுக்கான ஆண்டு காலம் 5 ஆண்டுகள். இந்த திட்டத்தின் கீழ் கடன் வாங்குவதற்கு நாம் 18 வயதை பூர்த்தி அடைந்தவராக இருக்க வேண்டும். மேலும் முத்ரா கார்டு எனும் டெபிட் கார்டு நமக்கு வழங்கப்படும். இதனை கொண்டு நாம் தொழிலுக்கு தேவையான மூல பொருட்களை வாங்கி கொள்ளலாம்.

mudra debit card

mudra debit card

இந்த கடனை நாம் அனைத்து அரசு, தனியார் வங்கிகளிலும், கூட்டுறவு வங்கிகளிலும், நுன்கடன் நிறுவனங்களிலும் சரியான விளக்கங்களை கொடுத்து பெற்று கொள்ளலாம். எனவே நீங்களும் தொழில் தொடங்க விரும்பினால் இத்திட்டத்தினை உபயோகப்படுத்தலாம்.

google news