Connect with us

Cricket

கோலியும் இல்லை, டோனியும் இல்லை.. ஐ.பி.எல். கிங் இவர் மட்டும் தாங்க.. ரிங்கு சிங் அதிரடி!

Published

on

சீனாவின் ஆங்சோவில் நடைபெறும் ஆசிய போட்டிகள் தொடருக்கான இந்திய அணியில் இடம்பிடித்துள்ளார் ரிங்கு சிங். சமீபத்தில் நடைபெற்று முடிந்த ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்தியதன் மூலம், பல ஆண்டுகள் போராட்டத்திற்கு கிடைத்த பலனாக இந்திய அணியில் தேர்வாகி இருக்கிறார் ரிங்கு சிங்.

Virat-Kohli-and-MS-Dhoni

Virat-Kohli-and-MS-Dhoni

இந்த நிலையில், இந்திய அணியில் தேர்வாகி இருப்பது பற்றி ரிங்கு சிங் பேட்டி அளித்திருக்கிறார். அதில் பல்வேறு தலைப்புகள் குறித்து தனது கருத்துக்களை பகிர்ந்ததோடு, கிரிக்கெட்டில் தனது கடவுளாக இருக்கும் நபர் பற்றியும் தெரிவித்து இருக்கிறார்.

 

25 வயதான ரிங்கு சிங் ஆரம்பம் முதலே, தான் சுரேஷ் ரெய்னாவை பார்த்தே வளர்ந்ததாக தெரிவித்து இருக்கிறார். தொடர்ச்சியாக சுரேஷ் ரெய்னாவுடன் தொடர்பில் இருப்பதாகவும், அவர் தனக்கு போட்டியில் சிறப்பாக செயல்படுவதற்கு ஆலோசனை வழங்கி வருவதாகவும் ரிங்கு சிங் தெரிவித்து இருக்கிறார்.

Suresh-Raina1

Suresh-Raina

முன்னாள் இந்திய கிரிக்கெட் அணி மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் நட்சத்திர வீரரான சுரேஷ் ரெய்னா சமீபத்தில் தான், தனது ஓய்வை அறிவித்தார். சுரேஷ் ரெய்னா மட்டுமின்றி தனக்கு ஹர்பஜன் சிங்-ம் தொடர்ந்து ஆதரவாக செயல்பட்டு வருகிறார் என்று ரிங்கு சிங் தெரிவித்து இருக்கிறார்.

“கிரிக்கெட்டில் எனக்கு சுரேஷ் ரெய்னா எப்போதும் கடவுளுக்கு நிகராக இருக்கிறார். நான் அவருடன் தொடர்ந்து பேசி வருகிறேன். அவர்தான் ஐ.பி.எல். கிங், அவர் எனக்கு எப்போதும் ஆலோசனைகளை வழங்கி வருகிறார். எனது கிரிக்கெட் வாழ்க்கை மேம்படுவதற்கு அவர் அதிகளவில் உதவியாக இருந்து வந்துள்ளார்.”

harbhajan-singh1

harbhajan-singh

“ஹர்பஜன் சிங்கும் எனது கிரிக்கெட் வாழ்க்கைக்கு நிறைய உதவிகளை செய்து இருக்கிறார். இவர்களின் உதவிக்கு நான் எப்போது கடமைப்பட்டிருக்கிறேன். இவர்களை போன்ற பெரிய விளையாட்டு வீரர்கள் உங்களை பற்றி பேசும் போது, அது இன்னும் அதிக சாதிக்க தூண்டும் வகையில் ஊக்கத்தை கொடுக்கும்,” என்று ரிங்கு சிங் தெரிவித்து இருக்கிறார்.

2023 ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் ரிங்கு சிங் 474 ரன்களை குவித்து அசத்தினார். இந்திய ஆடவர் கிரிக்கெட் அணி ஆங்சோவில் துவங்கும் ஆசிய போட்டிகளில் களமிறங்க இருக்கிறது. இந்த போட்டிகள் விரைவில் துவங்க இருக்கின்றன.

ஆசிய போட்டிக்கான இந்திய அணி வீரர்கள் விவரம்:

ருதுராத் கெய்க்வாட் (கேப்டன்), யஷஸ்வி ஜெய்ஸ்வால், ராகுல் திரிபாதி, திலக் வர்மா, ரிங்கு சிங், ஜிதேஷ் ஷர்மா (விக்கெட் கீப்பர்), வாஷிங்டன் சுந்தர், ஷாபாஸ் அகமது, ரவி பிஷ்னோய், ஆவேஷ் கான், அர்தீங் சிங், முகேஷ் குமார், ஷிவம் மாவி, ஷிவம் தூபே மற்றும் பிரப்சிம்ரன் சிங் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

ஸ்டான்ட்-பை வீரர்கள் பட்டியலில்: யாஷ் தாக்கூர், சாய் கிஷோர், வெங்கடேஷ் ஐயர், தீபக் ஹூடா மற்றும் சாய் சுதர்சன் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டு உள்ளனர்.

google news