Cricket
இந்திய கேப்டன் செய்தது ரொம்ப ஓவரா இருக்கு! பாகிஸ்தான் கேப்டன் கண்டனம்!
இந்திய மகளிர் அணியின் கேப்டன் ஹர்மன்பிரித் கவுர் வங்கதேசத்துக்கு எதிரான 3-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியின் போது நடுவரை அசிங்கமாக திட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. அது மட்டுமின்றி, போட்டி சமநிலையில் முடிந்த காரணத்தால் இரு அணிகளும் கோப்பையை பகிர்ந்து கொள்ளும் சமயத்தில், வங்கதேச அணி கேப்டனிடம் ஹர்மன்ப்ரீத் நடுவரையும் அழைக்குமாறு கூறினார்.
இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் இது குறித்து வங்கதேசத்து கிரிக்கெட் கேப்டன் தற்போது குற்றம் சாட்டி பேட்டி ஒன்றில் பேசியுள்ளார் . இது குறித்து பேசிய வங்கதேசத்து கிரிக்கெட் கேப்டன் நிகர் சுல்தானா ” இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் அப்படி செய்வது நியாயமே இல்லை. அவர் செய்த அந்த செயல் மிகவும் மோசமான செயல். அவர் எங்கள் குழுவுடன் இணைந்து புகைப்படம் எடுக்கும் பொழுது நடுவரை தவறான வார்த்தைகளில் திட்டினார்.
இந்த நிலையில், இதற்கு பலரும் கண்டனங்களை தெரிவித்து வரும் நிலையில், பாகிஸ்தான் அணியின் கேப்டன் ஷாகித் அப்ரிடி சமீபத்திய பேட்டி ஒன்றில் தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார். இது குறித்து பேசி அவர் மகளிர் கிரிக்கெட் தொடரில் இந்திய கேப்டன் அவ்வாறு நடந்து கொண்டது மிகவும் மோசமான செயல். அவர் அப்படி நடந்துகொண்டது மிகவும் தவறு. கிரிக்கெட்டில் விளையாடும்போது நாம் அடுத்த தலைமுறைகளுக்கு ஒரு முன்னுதாரணமாக தான் இருக்க வேண்டும்.
இப்படி நடந்தால் நம்மளை பார்த்து வரும் இளம் தலைமுறையினர்களுக்கு எண்ணம் அதே போன்று போகும். எனவே, இதை எல்லாம் கருத்தில் கொண்டு இது போன்ற விஷயங்களில் செயல்படவே கூடாது. இதற்கு முன்பு கூட நான் இதைப் போல சண்டைகளை பார்த்திருக்கிறேன். ஆனால் மகளிர் கிரிக்கெட்டில் இதுதான் முதல் முறை பார்க்கிறேன். என்னை பொறுத்தவரை என்னிடம் கேட்டீர்கள் என்றால் இந்திய அணி கேப்டன் செய்தது தவறுதான் என நான் கூறுவேன் என தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார்.