Cricket
அவர் சொல்றது சரிதான், ஆனால்..பான்டியாவுக்கு ஆதரவாக சாஸ்திரியை எதிர்த்த முன்னாள் கேப்டன்..!
ஹர்திக் பான்டியாவின் உடல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டிக்கு ஏற்றதாக இருக்காது என்று முன்னாள் இந்திய கிரிக்கெட் அணி வீரர் ரவி சாஸ்திரி தெரிவித்து இருந்தார். மேலும், அவர் உடற்தகுதியுடன் இருப்பதாக நினைத்தால், அவர் டெஸ்ட் அணிக்கு கேப்டன் பொறுப்பை ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று தெரிவித்து இருந்தார்.
தற்போது 1983 உலக கோப்பையை வென்ற இந்திய அணி கேப்டன் கபில் தேவ், இதே விஷயம் குறித்து கருத்து தெரிவித்துள்ளார். மேலும் இவரின் கருத்து ரவி சாஸ்திரியின் கருத்துக்களுக்கு முரணாக இருக்கிறது. மேலும் ரவி சாஸ்திரியின் கருத்துக்களுக்கு கபில் தேவ் கேள்வி எழுப்பி இருக்கிறார். இதுபற்றி கபில் தேவ் கூறியதாவது..,
“நான் அவரின் கருத்துக்களுக்கு மரியாதை கொடுக்கிறேன், ஆனால் ஏன்? டென்னிஸ் லில்லியை போன்று யாருக்கும் இடையூறுகள் ஏற்பட்டதில்லை. இதனால், நான் அதை நம்பவில்லை. மனித உடல் எங்கிருந்து வேண்டுமானாலும், மீண்டு வரும், முன்னணி இடத்துக்கும் வரும். சிறந்த வீரராக இருக்கும் ஹர்திக் பான்டியாவை நீங்கள் கூறுகின்றீர்கள், அவர் சிறப்பாக இருக்கிறார். அவர் தனது உடல் மீது அதிக உழைப்பை கொடுக்க வேண்டும் எனில், அதை அவர் செய்தாக வேண்டும்,” என்று தெரிவித்தார்.
இந்தியா மற்றும் வெஸ்ட் இன்டீஸ் அணிகள் இடையேயான இரண்டாவது ஒருநாள் போட்டியில், ஹர்திக் பான்டியா கேப்டனாக களமிறங்கினார். இந்திய அணியில் ரோகித் ஷர்மா மற்றும் விராட் கோலிக்கு ஓய்வு அளிக்கப்பட்டது. சஞ்சு சாம்சனுக்கு அணியில் வாய்ப்பு அளிக்கப்பட்டது. இரண்டாவது ஒருநாள் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் ஹர்திக் பான்டியா கூறியதாவது..,
“நாம் முதலில் பேட்டிங் செய்ய விரும்புகிறோம். இந்த பிட்ச்-இல் எவ்வளவு ரன்களை அடிக்க முடியும் என்று பார்க்க வேண்டும். ரோகித் மற்றும் விராட் கோலி தொடர்ச்சியாக சிறப்பான கிரிக்கெட்டை விளையாடி வருகின்றனர், இதனால் தான் அவர்கள் ஓய்வு எடுக்கின்றனர். ஒருவரை 115 ரன்களில் அவுட் செய்யும் போது, அது நல்ல விஷயம் ஆகும். நமது கேட்சிங் சிறப்பாக இருந்து வந்துள்ளது. சில இடங்களில் மட்டும் நாம் முன்னேற்றம் அடைய வேண்டும்,” என்று தெரிவித்தார்.
வெஸ்ட் இன்டீஸ் அணிக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில், ஹர்திக் பான்டியா தலைமையிலான இந்திய அணி தோல்வியை தழுவியது. முதலில் பேட்டிங் ஆடிய இந்திய அணி 181 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. பிறகு களமிறங்கிய வெஸ்ட் இன்டீஸ் அணி 36.4 ஓவர்களில் நான்கு விக்கெட்கள் இழப்புக்கு வெற்றி இலக்கை எட்டியது.