Connect with us

Cricket

55 பந்துகளில் 137 ரன்கள்.. பூரான் காட்டடியால் எம்.எல்.சி. கோப்பையை வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி..!

Published

on

Nicholas-Pooran-Featured-img

மேஜர் கிரிக்கெட் லீகின் முதல் எடிஷனின் இறுதி போட்டி நேற்று நடைபெற்றது. டல்லாஸ்-இல் நடைபெற்ற பரபரப்பான இறுதி போட்டியில் மும்பை இந்தியன்ஸ் நியூ யார்க் அணி சாம்பியன் பட்டம் வென்று அசத்தியது. போட்டியில் டாஸ் வென்ற சியாட்டில் ஆர்கஸ் அணி பேட்டிங் செய்ய முடிவு செய்தது. அதன்படி 20 ஓவர்களில் 9 விக்கெட்கள் இழப்புக்கு ஆர்கஸ் அணி 183 ரன்களை குவித்தது.

ஆர்கஸ் அணி சார்பில் குயின்டன் டி கார் 87 ரன்களை விளாசினார். 184 ரன்களை இலக்காக கொண்டு களமிங்கிய மும்பை இந்தியன்ஸ் நியூ யார்க் அணிக்கு துவக்கமே அதிர்ச்சி காத்திருந்தது. மும்பை அணியின் துவக்க வீரர் ஸ்டீவன் டெய்லர் ரன் ஏதும் எடுக்காமல் விக்கெட்டை பறிக்கொடுத்த நிலையில், மற்றொரு துவக்க வீரரான ஷயன் ஜஹாங்கிர் பத்து ரன்களில் பெவிலியன் திரும்பினார்.

Nicholas-Pooran

Nicholas-Pooran

அடுத்து களமிறங்கிய மும்பை இந்தியன்ஸ் நியூ யார்க் அணியின் கேப்டன் நிக்கோலஸ் பூரான் 55 பந்துகளில் 137 ரன்களை விளாசினார். கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்த பூரான் மும்பை அணி அறிமுக தொடரிலியே சாம்பியன் பட்டம் வெல்ல முக்கிய காரணமாக விளங்கினார். மும்பை இந்தியன்ஸ் நியூ யார்க் அணிக்கு டெவால்ட் பிரெவிஸ் 20 ரன்களையும், டிம் டேவிட் 10 ரன்களையும் எடுத்தனர்.

இதன் மூலம் மும்பை இந்தியன்ஸ் நியூ யார்க் அணி வெற்றி இலக்கை ஏழு விக்கெட்கள் கைவசம் இருந்த நிலையில், 16 ஓவர்களிலேயே எட்டியது. நிக்கோலஸ் பூரான் தன் பங்கிற்கு 13 சிக்சர்களையும், 10 பவுன்டரிகளையும் விளாசினார். போட்டியின் கடைசி ஓவராக அமைந்த 16-வது ஓவரில் மட்டும் நிக்கோலஸ் பூரான் 24 ரன்களை குவித்தார்.

MLC-Champions-MINY

MLC-Champions-MINY

முதலில் ஆடிய சியாட்டில் ஆர்கஸ் அணிக்கு குயின்டன் டி காக் தவிர மற்ற வீரர்கள் யாரும் அதிக ரன்களை குவிக்கவில்லை. மும்பை இந்தியன்ஸ் நியூ யார்க் அணி சார்பில் சிறப்பாக பந்துவீசிய டிரென்ட் பௌல்ட் மற்றும் ரஷித் கான் தலா மூன்று விக்கெட்களை வீழ்த்தினர். இதோடு ஸ்டீவன் டெய்லர் மற்றும் டேவிட் வெய்ஸ் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.

மும்பை இந்தியன்ஸ் நியூ யார்க் அணி கோப்பையை வென்றது ஒருபக்கமும், நிக்கோலஸ் பூரானின் அதிரடி ஆட்டமும் சமூக வலைதளங்களில் வேகமாக வைரல் ஆகி வருகிறது.

google news