Cricket
தோனி மாதிரி விளையாடுறாரு… ஹர்திக் பாண்டியாவை புகழ்ந்து தள்ளிய முன்னாள் கிரிக்கெட் வீரர்
கடந்த சில நாட்களாகவே ஹர்திக் பாண்டியாவின் பேக்கிங் சரியில்லை என்றும் அவருடைய பேட்டிங் சற்று மோசமாகி விட்டதாகவும் அவர் பழைய ஃபார்ம போய்விட்டதாகவும் பலரும் கூறி வந்தார்கள். இந்நிலையில் அவர்களுக்கெல்லாம் பதிலடி கொடுக்கும் வகையில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக நடைபெற்ற மூன்றாவது ஒருநாள் போட்டியில் 52 பந்துகளில் 5 சிக்ஸர்கள் மற்றும் 4 பவுண்டரிகளுடன் 70* ரன்கள் விளாசினார்.
அவருடைய பாரமான ஆட்டம் அனைவரையும் வெகுவாக ஈர்த்த நிலையில். அவருடைய பேக்கரியை பற்றி பலரும் பாராட்டி புகழ்ந்து பேசி வருகின்றனர். அந்த வகையில் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் ஹனுமா விஹாரி சமீபத்திய பேட்டி ஒன்றில் ஹர்திக் பாண்டியாவின் பேட்டிங் பற்றி பேசி உள்ளார். இது வைத்து பேசிய அவர் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக நடைபெற்ற மூன்றாவது போட்டியில் ஹர்திக் பாண்டியாவின் ஆட்டம் பார்ப்பதற்கு மிகவும் அருமையாக இருந்தது.
இது எம்எஸ் தோனி மாதிரியான ஒரு இன்னிங்ஸ். அவர் தொடக்கத்தில் பெற்ற அமைதியாக விளையாடிக் கொண்டு பிறகு அதிரடியாக விளையாட தொடங்கினார். தோனியும் இதே போல தான் கிரிக்கெட் விளையாடுவார் முதலில் சற்று பொறுமையாக பந்தை கவனித்து விளையாடுவார் பிறகு நேரம் ஆக ஆக அதிரடியாக விளையாட தொடங்குவார் அதேபோலத்தான் ஹர்திக் பாண்டியாவும் விளையாடி உள்ளார்.
ஹர்திக் பாண்டியாவின் பேட்டிங் சமீப காலமாக சரியில்லை என்று ஒரு பேச்சி உலாவிக் கொண்டு இருந்த நிலையில், அதற்கெல்லாம் பதிலடி கொடுக்கும் வகையில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக நடைபெற்ற மூன்றாவது கிரிக்கெட் போட்டியில் அதிரடியாக விளையாடி நல்ல முன்னேற்றத்தை கண்டுள்ளார். ஒரு ஆல் ரவுண்டராக இருந்து துணை கேப்டனாக மாறி ஒரு அணியை வழிநடத்தும் அளவிற்கு அவருடைய வளர்ச்சி பார்ப்பதற்கு நன்றாக இருக்கிறது வரும் போட்டிகளில் அவர் சிறப்பாக விளையாட என்னுடைய முழு வாழ்த்துக்களை அவருக்கு நான் தெரிவித்துக் கொள்கிறேன்’ என ஹனுமா விஹாரி கூறியுள்ளார்.