Connect with us

Cricket

விராட் கோலியுடன் இது தான் பஞ்சாயத்து.. ஓபனாக பேசிய கைல் மேயர்ஸ்..!

Published

on

Virat-Kohli-vs-Gautam-Gambhir-vs-Kyle-Mayers

இந்திய பிரீமியர் லீக் (ஐ.பி.எல்.) 2023 தொடரின் அதிகம் பேசப்பட்ட சர்ச்சைகளில் ஒன்றாக ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் விராட் கோலி மற்றும் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் (எல்.எஸ்.ஜி.) அணியை சேர்ந்தவர்கள், குறிப்பாக கவுதம் கம்பீர் மற்றும் நவீன் உல்-ஹக் இடையே ஏற்பட்ட மோதல் உள்ளது. குறிப்பிட்ட போட்டி முழுக்க எல்.எஸ்.ஜி. வீரர்கள் அவுட் ஆகும் போதெல்லாம், விராட் கோலி ஆக்ரோஷமாக செயல்பட்டு வந்தார்.

போட்டி முடிந்த பிறகு, விராட் கோலி மற்றும் கவுதம் கம்பீர் ஒருவரை ஒருவர் கைகுலுக்கி கொண்டனர். அப்போது வரை எல்லாமே சாதாரணமாகவே இருந்தது. அப்போது, எல்.எஸ்.ஜி. துவக்க வீரர் கைல் மேயர்ஸ் விராட் கோலியிடம் சென்று எதையே பேச துவங்கினார். உடனே கவுதம் கம்பீர் இருவரிடம் வந்து கைல் மேயர்ஸ்-ஐ தூரமாக அழைத்து சென்றார்.

Virat-Kohli-vs-Gautam-Gambhir

Virat-Kohli-vs-Gautam-Gambhir

சிறிது நேரத்தில் கவுதம் கம்பீர் மற்றும் விராட் கோலியிடம் ஆக்ரோஷமாக பேசிக் கொண்டிருந்தார். இருவரிடையே கே.எல். ராகுல் மற்றும் அணியை சேர்ந்த மற்ற அதிகாரிகள் இருவரையும் பிரித்து தூரமாக அழைத்து சென்றனர். அப்போது விராட் கோலி எல்.எஸ்.ஜி. கேப்டன் கே.எல். ராகுல் உடன் நீண்ட நேரம் பேசிக் கொண்டிருந்தார். தற்போது இந்த சம்பவம் குறித்து கைல் மேயர்ஸ் மனம் திறந்து பேசியிருக்கிறார். இது குறித்து அவர் கூறியதாவது..,

“இது சிறப்பானது, சில சமயங்களில் எதிரணியை எதிர்க்க வேண்டும், போட்டியை விட்டு வெளியேற ஏதேனும் வாய்ப்பை உருவாக்க வேண்டும். ஆக்ரோஷமாக இருப்பது எப்போதும் நல்ல விஷயம் தான். இது ஆர்வத்தை வெளிப்படுத்துவதோடு, அணியை வெற்றி பெற அழைத்துச் செல்லும்,” என்று தெரிவித்தார்.

இந்த சம்பவம் தொடர்பாக விராட் கோலி மற்றும் கவுதம் கம்பீர் ஆகியோருக்கு அபராதம் விதிக்கப்பட்டது. இது பற்றி ஐ.பி.எல். வெளியிட்ட செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது..,

Virat-Kohli-vs-Gautam-Gambhir-1

Virat-Kohli-vs-Gautam-Gambhir-1

“டாடா இந்தியன் பிரீமியர் லீக் 2023 தொடரின் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூகு அணிக்கு எதிராக லக்னோவில் உள்ள பாரத ரத்னா ஸ்ரீ அடல் பிகாரி வாஜ்பாய் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற போட்டியின் போது நடத்தை விதிகளை மீறியதற்காக லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணி ஆலோசகர் கவுதம் கம்பீருக்கு, அவரின் 100 சதவீத போட்டி கட்டணம் அபராதமாக விதிக்கப்படுகிறது.”

“ஐ.பி.எல். நடத்தை விதிகளில் 2.21 சட்டத்தின் கீழ் கவுதம் கம்பீர் லெவல் 2 குற்றத்தை செய்ததாக ஒப்புக் கொண்டார். ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு பேட்டர் விராட் கோலிக்கும், லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிக்கு எதிராக லக்னோவில் உள்ள பாரத ரத்னா ஸ்ரீ அடல் பிகாரி வாஜ்பாய் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற போட்டியின் போது நடத்தை விதிகளை மீறியதற்காக, அவரின் போட்டி ஊதியத்தில் 100 சதவீதத்தை அபராதமாக விதிக்கப்படுகிறது. விராட் கோலி ஐ.பி.எல். நடத்தை விதிகள் 2.21-இன் கீழ் லெவல் 2 குற்றத்தை செய்ததாக ஒப்புக் கொண்டுள்ளார்,” என்று தெரிவித்து இருந்தது.

google news