Connect with us

job news

இந்திய இரயில்வேயில் வேலை.. நல்ல சம்பளத்துடன் வேலை பெற பொன்னான வாய்ப்பு ..உடனே விண்ணப்பியுங்கள் ..ரயில்வே 2023:

Published

on

railway 2023

 

இந்திய இரயில்வேயில் 500 க்கும் மேற்பட்ட பணியிடங்களுக்கு ஆட்சேர்ப்பு நடத்தப்பட உள்ளது. இந்த காலியிடம் பிலாஸ்பூர் மாவட்டம், சத்தீஸ்கர் பிரிவுக்கு வந்துள்ளது. இந்த ஆட்சேர்ப்புக்கான விண்ணப்ப செயல்முறை நடந்து வருகிறது. ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் ஜூன் 3 வரை விண்ணப்பிக்கலாம் என அறிவிப்பு வெளிவந்துள்ளது.

railway 2023

railway 2023

 

இந்திய ரயில்வே ஆட்சேர்ப்பு 2023:

இந்திய ரயில்வேயில் வேலை கிடைக்கும் என்ற கனவில் இருக்கும் இளைஞர்களுக்கு ஒரு சிறந்த செய்தி உள்ளது.”ஐடிஐ” தேர்ச்சி பெற்றிருந்தால் ரயில்வேயில் அரசு வேலைக்கு போதுமான தகுதியாகும் என்று அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி, இந்திய ரயில்வே ”548” பணியிடங்களுக்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்களை வரவேற்கிறது.

இந்த ஆட்சேர்ப்புக்கான விண்ணப்பிக்கும் முறை தொடங்கியது. ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் இந்த ரயில்வே ஆட்சேர்ப்புக்கு அதிகாரப்பூர்வ வலைத்தளமான ”secr.indianrailways.gov.in” ஐப் பார்வையிடுவதன் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். இந்த ஆட்சேர்ப்பு தொடர்பான அனைத்து முக்கிய விவரங்களும் இங்கே கொடுக்கப்பட்டுள்ளன.

விண்ணப்பிக்க கடைசி தேதி :

இந்த ஆட்சேர்ப்புக்கான விண்ணப்பப் படிவத்தை பூர்த்தி செய்ய விண்ணப்பதாரர்களுக்கு ரயில்வே ஜூன் 3, 2023 வரை அவகாசம் அளித்துள்ளது. இருப்பினும், விண்ணப்பத்தின் கடைசி தேதி வருவதற்க்கு இன்னும் நிறைய கால அவகாசம் உள்ளது. இருப்புனும் ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் இந்த பதவிகளுக்கு சரியான நேரத்தில் விண்ணப்பிக்க அறிவுறுத்தப்படுகிறார்கள்.

பல பதவிகளில் ஆட்சேர்ப்பு நடைபெறும் :

இந்த ஆட்சேர்ப்பின் மூலம், மொத்தம் 548 பணியிடங்களுக்கான காலியிடங்களை ரயில்வே வெளியிட்டுள்ளது. இந்த ஆட்சேர்ப்பு பிலாஸ்பூர் பிரிவில் அப்ரண்டிஸ் பதவிகளுக்கானது.

 

தகுதி என்ன என்பதை அறிந்து கொள்ளுங்கள்:

இந்த ரயில்வே ஆட்சேர்ப்புக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இதனுடன், அங்கீகரிக்கப்பட்ட நிறுவனத்தில் இருந்து தொடர்புடைய டிரேடுகளில் ஐடிஐ தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இந்தத் தகுதிகள் இருந்தால் இந்தப் பதவிகளுக்கு விண்ணப்பிக்கலாம்.

 

நிர்ணயிக்கப்பட்ட வயது வரம்பு :

இந்த ஆட்சேர்ப்புக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களின் குறைந்தபட்ச வயது வரம்பு 15 ஆக இருக்க வேண்டும். அதேசமயம், 24 வயதுக்குட்பட்ட இளைஞர்கள் விண்ணப்பப் படிவத்தை நிரப்பலாம். இருப்பினும், ஒதுக்கப்பட்ட பிரிவினருக்கு அதிகபட்ச வயது வரம்பில் தளர்வு அளிக்கப்படுகிறது.

 

 

 

 

 

 

 

 

google news
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *