latest news
13 மாவட்டங்களில் கனமழை!.. வானிலை மையம் எச்சரிக்கை…
இந்த வருடம் கோடையில் அக்னி நட்சத்திரம் நிகழ்ந்து கொண்டிருந்தபோதே தமிழகத்தில் பல மாவட்டங்களிலும் மழை பெய்ய துவங்கியது. குறிப்பாக சென்னை, மதுரை, தேனி, திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமாரி ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்தது. இதனால், அங்கு கோடை வெயிலின் தாக்கமே மிகவும் குறைவாக இருந்தது.
அதன்பின் கனமழை நின்றுவிட்டாலும் கடந்த ஒரு மாத காலமாகவே தமிழகத்தின் பல மாவட்டங்களிலும் தொடர்ந்து மழை பெய்து வந்தது. இது மக்களை மகிழ்ச்சியில் வைத்திருந்தது. இந்நிலையில், அடுத்த 3 மணி நேரத்தில் தமிழகத்தின் 13 மாவட்டங்களில் கனழை பெய்யும் என சென்னை வானிலை மையம் அறிவித்திருக்கிறது.
சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், வேலூர், ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களில் மிதமான மழையும், நீலகிரி, கோவை, திண்டுக்கல், தேனி, சேலம், ஈரோடு, நாமக்கல் உள்ளிட்ட மாவட்டங்களில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் சென்னை வானிலை மையைம் அறிவித்திருக்கிறது. இந்த செய்தி இந்த மாவட்டங்களில் வசிக்கும் மக்களுக்கு மகிழ்ச்சியை கொடுத்திருக்கிறது.