latest news
தொடர்ந்து 5 நாட்கள் தமிழகத்தில் கனமழை!.. வானிலை மையம் முக்கிய அறிவிப்பு…
தமிழகத்தில் கடந்த பல நாட்களாகவே மழை பெய்து வருகிறது. சென்னை, திருநெல்வேலி, தூத்துக்குடி, மதுரை போன்ற மாவட்டங்களில் அதிக மழை பெய்தது. இந்நிலயில், 5 நாட்களுக்கு தமிழகத்தில் கனமழை பொழியும் என சென்னை வானிலை மையம் அறிவித்திருக்கிறது.
சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் சொல்லியிருப்பதாவது:
தென்னிந்திய பகுதிகளின் மேல்பக்கம் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. அதன் காரணமாக, 14ம் தேதி முதல் 15ம் தேதி வரை தமிழகத்தின் சில இடங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் இடி மற்றும் மின்னலுடன் கூடிய லேசானது முதல் கனமான மழை பெய்ய வாய்ப்பிருக்கிறது.
அதேபோல் 16ம் தேதி முதல் 18ம் தேதி வரை தமிழகத்தின் சில இடங்களிலும் புதுவை மற்றும் காரைக்கால் பகுதியிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் முதல் மிதமான மழை பெய்யக்கூடும். மொத்தத்தில் 14ம் தேதி முதல் 18ம் தேதி வரை 5 நாட்களுக்கு புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் அதிக வெப்பநிலை 2 டிகிரி முதல் மைனஸ் 3 செல்சியஸ் என இயல்பை விட அதிகமாக இருக்கும்.
மேலும், அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். மாலை மற்றும் இரவு வேளைகளில் இடி மற்றும் மின்னலுடன் கூட மிதமான மழை பெய்யும். 14ம் தேதி தெற்கு மற்றும் மத்திய வங்கக்கடல் பகுதிகளில் வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசும் என வானிலை மையம் தெரிவித்திருக்கிறது.