tech news
பல ஆண்ட்ராய்டு போன்களில் கூகுளின் “மேஜிக் அம்சம்”
கூகுள் நிறுவனம் தனது மேஜிக் எடிட்டர் அம்சத்தை கூகுள் போட்டோஸ் செயலியில் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் அறிமுகம் செய்தது. மேலும், இந்த அம்சம் கூகுள் பிக்சல் 8 சீரிஸ் மாடல்களில் மட்டுமே வழங்கப்பட்டு வந்தது. அறிமுகத்தின் போது பிக்சல் 8 மாடல்களில் மட்டுமே வழங்கப்பட்ட மேஜிக் எடிட்டர் அம்சம் தற்போது பல்வேறு ஆண்ட்ராய்டு சாதனங்களிலும் வழங்கப்பட்டு வருகிறது.
மேஜிக் எடிட்டர் அம்சத்தை தனது கூகுள் போட்டோஸ் ஆப் மூலம் கூகுள் நிறுவனம் பல்வேறு ஆண்ட்ராய்டு சாதனங்களிலும் வழங்கி வருகிறது. அந்த வகையில், பிக்சல் போன்களில் மட்டுமே வழங்கப்பட்டு இருந்த மேஜிக் எடிட்டர் அம்சம் என்னென்ன வசதிகளை வழங்கும் என்பதை தொடர்ந்து பார்ப்போம்.
கூகுள் மேஜிக் எடிட்டர்:
கூகுள் பிக்சல் போன் அல்லது சாம்சங் ஸ்மார்ட்போன் வைத்திருப்போர் கூகுள் போட்டோஸ் 6.85 அப்டேட் செய்திருந்தால் மேஜிக் எடிட்டர் அம்சத்தை பெற்றிருக்க வேண்டும். கூகுள் பிக்சல் போன்களில் மேஜிக் எடிட்டர் அம்சம் இலவசமாகவே வழங்கப்படுகிறது. இதன் காரணமாக பயனர்கள் இந்த அம்சத்தை அன்லிமிடெட் முறையில் பயன்படுத்தி வரலாம். எனினும், சாம்சங் மற்றும் இதர பிராண்ட் ஸ்மார்ட்போன் வைத்திருப்போர், மேஜிக் எடிட்டர் சேவையை ஒவ்வொரு மாதமும் அதிகபட்சம் பத்து முறை வரை பயன்படுத்திக் கொள்ளலாம்.
சாம்சங், இதர பிராண்ட் ஸ்மார்ட்போன் வைத்திருப்போரும் மேஜிக் எடிட்டர் அம்சத்தை அன்லிமிட்டெட் முறையில் பயன்படுத்த கூகுள் ஒன் பிரீமியம் சந்தாவை வாங்க வேண்டும். மேஜிக் எடிட்டர் அம்சம் கொண்டு புகைப்படத்தில் ஒரு பகுதியில் மாற்றம் செய்ய முடியும். இந்த மாற்றங்களில் புகைப்படத்தின் ஒரு பகுதியில் இருக்கும் தேவையற்ற பொருட்கள், நபர், செடி என எதுவாயினும் ஒரே க்ளிக் மூலம் நீக்கிவிட முடியும்.
கூகுள் போட்டோஸ் ஆப் மேஜிக் எடிட்டர் மட்டுமின்றி ஏராளமான இதர அம்சங்களை வழங்குகிறது. இதில், மேஜிக் இரேசர், அன்-பிலர், போர்டிரெயிட் பிலர், போர்டிரெயிட் லைட், ஸ்கை சஜெஷன், கலர் பாப், HDR எஃபெக்ட், சினிமேடிக் போட்டோஸ் மற்றும் பல்வேறு இதர அம்சங்கள் அடங்கும்.