latest news
அடுத்த 5 நாட்களுக்கு வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும்!.. வானிலை மையம் எச்சரிக்கை…
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக மழை பற்றிய செய்தியை சொல்லி வந்த வானிலை மையம் தற்போது அடுத்த 5 நாட்களுக்கு வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும் என கூறி இருக்கிறது. வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக 16ம் தேதி முதல் 22ம் தேதி வரை தமிழகத்தில் சில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகலிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டது.
இன்று வானிலை மையம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் ’16ம் தேதி ஜூன் முதல் 20ம் தேதி வரை தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் அதிக பட்ச வெப்பநிலை 2 டிகிரி முதல் 3 டிகிரி செல்சியல் அவரை அதிகரிக்கும்.
அதேபோல், சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் மேக மூட்டத்துடன் காணப்படும் எனவும். சில பகுதிகளில் இரவு வேளையில் இடி மற்றும் மின்னலுடன் கூட மிதமான மழை பெய்யக்கூடும். அதேபோல் அதிகபட்ச வெப்ப்நிலை 37-38 டிகிரியும், குறைந்தபட்ச வெப்பநிலை 27-28 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கும்’ என சொல்லப்பட்டிருக்கிறது.