india
மேற்கு வங்க ரயில் விபத்து!. பலி எண்ணிக்கை 15 ஆக உயர்வு!.. 10 லட்சம் நிவாரணம் அறிவிப்பு…
விபத்தில் உயிர் பலி ஏற்படுவது என்பது எப்போதும் சோகமான ஒன்றுதான். அதுவும் ரயில் விபத்தில் பலரும் உயிரிழப்பது அதிர்ச்சி அடைய வைக்கும் ஒன்று. அப்படித்தான் மேற்கு வங்கத்தில் பயணிகள் ரயில் மீது சரக்கு ரயில் மோதி 15க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த சோக சம்பவம் நடந்துள்ளது.
மேற்கு வங்க மாநிலம் டார்ஜிலிங் மாவட்டத்தில் நின்று கொண்டிருந்த பயணிகள் விரைவு ரயில் மீது சரக்கு ரயில் மோதியதால் இந்த கோர விபத்து நடந்திருக்கிறது. இந்த விபத்தில் கடைசிப்பெட்டி தூக்கி வீசப்பட்டிருக்கிறது. அனவே, அந்த பெட்டியில் இருந்தவர்களில் 15 பேர் உயிரிழந்திருக்கிறார்கள்.
இந்த விபத்தில் 5 பேர் உயிரிழந்ததாகவும், 20க்கும் மேற்பட்டோர் காயமடைந்ததாகவும் முதலில் செய்திகள் வெளியான நிலையில் இப்போது பலி எண்ணிக்கை அதிகரித்திருக்கிறது. இதுவரை 60 பேர் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மீட்பு நடவடிக்கை வேகமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இந்த விபத்தில் பலி ஆனவர்களின் குடும்பதிற்கு ரூ.10 லட்சம் நிவாரணமாக வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது.
சிக்னல் கொடுத்திருந்தும் அதை கவனிக்காமல் சரக்கு ரயில் வந்ததால்தான் இந்த விபத்து ஏற்பட்டிருப்பதாக முதல் கட்ட விசாரணையில் தெரியவந்திருக்கிறது. இந்த விபத்து தொடர்பாக அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை செய்து வருகிறார்கள்.