india
பிறக்கும் போதே இவ்வளோ அதிர்ஷ்டமா? பேருந்து நிலையில் பிறந்த பெண் குழந்தைக்கு அடித்த ஜாக்பாட்…
ஜூன் 16ந் தேதி பத்ராசலம் செல்வதற்காக கர்ப்பிணி பெண் குமாரி தன் கணவருடன் தெலுங்கானாவின் கரீம் நகர் பேருந்து நிலையத்துக்கு வந்து இருக்கிறார். ஆனால் திடீரென அப்பெண்ணுக்கு பிரசவ வலி வந்து இருக்கிறது. அங்கிருந்த போக்குவரத்து ஊழியர்கள் ஆம்புலன்ஸுக்கு கால் செய்தனர்.
ஆம்புலன்ஸ் வருவதற்குள் குமாரிக்கு பிரசவ வலி அதிகரித்தது. இதனால் அங்கிருந்த ஊழியர்களான சைதம்மா, லாவண்யா, ஸ்ரவந்தி, பவானி, ரேணுகா, ரஜனிகிருஷ்ணா ஆகியோர் அப்பெண்ணுக்கு பேருந்து நிலையத்திலேயே பிரசவம் பார்க்க தொடங்கி இருக்கின்றனர். இதையடுத்து குமாரிக்கு அங்கையே பெண் குழந்தை பிறந்து இருக்கிறது.
குழந்தையும், தாயும் நலமுடன் அருகில் இருந்த அரசு மருத்துவமனையில் அடுத்தக்கட்ட சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டனர். இதையடுத்து மாநில அரசு போக்குவரத்து கழகம் அங்கு பிறந்த பெண் குழந்தைக்கு மாநிலப் பேருந்துகளில் வாழ்நாள் முழுவதும் இலவசமாக பயணம் செய்ய அனுமதி சீட்டும் கொடுத்து இருக்கிறது.
பெண்ணுக்கு தக்க சமயத்தில் உதவிய போக்குவரத்து ஊழியர்களுக்கும் போக்குவரத்து துறை பாராட்டுக்களை தெரிவித்து இருக்கிறது. 6 பெண் ஊழியர்கள் மற்றும் அஞ்சய்யா என்ற ஆண் ஊழியருக்கும் தலா 5 ஆயிரம் கொடுக்கப்பட்டு இருப்பதும் குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய விவகாரத்தில் பலி எண்ணிக்கை அதிகரிக்க இதான் காரணமா? பீதியில் மக்கள்!…