india
இனிமே லேட்டா வந்தா சம்பளம் கட்!. அரசு ஊழியர்களுக்கு கடும் எச்சரிக்கை..
மத்திய, மாநில அரசு சார்பில் நாடெங்கும் லட்சக்கணக்கான ஊழியர்கள் அரசின் பல அலுவகங்களில் பணி புரிந்து வருகின்றனர். அதேநேரம், அவர்களில் பலரும் அலுவகத்திற்கு சரியான நேரத்திற்கு வருவதில்லை. பலரும் தாமதமாகவே வந்து பணி செய்கிறார்கள் என்கிற புகார் உள்ளது.
இதற்கு முன் அவர்களின் வருகையை குறிப்பதற்கு பதிவேடு பயன்படுத்தப்பட்டது. பல இடங்களில் இருந்தும் புகார் வருவதால் பதிவேட்டில் நேரத்தை குறிப்பிடுவதற்காக பயோமெட்ரிக்கில் கைரேகையை பதிவிடும் முறையை மத்திய அரசு கொண்டு வந்துள்ளது.
ஊழியர்கள் சரியான நேரத்திற்கு வரவேண்டும் என உத்தரவிடப்பட்டிருக்கிறது. காலை 9.15 மணிக்குள் அலுவலகத்திற்கு வந்துவிட வேண்டும். இல்லையெனில் அரைநாள் விடுப்பாக கழிக்கப்படும் எனவும் எச்சரிக்கை விடப்பட்டிருக்கிறது. அதேபோல், குறிப்பிட்ட நாளில் பணிக்கு வரமுடியாத சூழ்நிலை அமைந்தால் உரிய நேரத்தில் தகவல் தெரிவிக்க வேண்டும் எனவும், சாதாரண விடுப்பை பெற அனுமதி பெற வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டிருக்கிறது.
கொரோனா காலத்திற்கு முன் மத்திய அரசு அலுவலகத்தில் பயோமெட்ரிக் பயன்படுத்தப்பட்டது. ஆனால், அதற்கு பின் அவை பின்பற்றப்படவில்லை. இப்போது மத்திய அரசு அலுவலகங்களில் பயோமெட்ரிக் முறை மீண்டும் அமுலுக்கு வருவது குறிப்பிடத்தக்கது.