Connect with us

india

தனிமையில் இருக்கும் பெண்களுக்கு வைக்கப்படும் குறி… டேட்டிங் செயலிகளால் பெருகும் ஆபத்து…

Published

on

இணையத்தின் வளர்ச்சி அதிகரிக்க ஆபத்துக்களும் அதனுடன் அதிகரித்து வருகிறது என்ற கூற வேண்டும். சமூக வலைதள கணக்குகள் தாண்டி தற்போது ஆன்லைன் டேட்டிங் செயல்களின் பயன்பாடும் தொடர்ச்சியாக அதிகரித்து வருகிறது. இந்த சேவைகளால் பலருக்கு பெரிய அளவில் ஆபத்தும் உருவாகிறது.

டெல்லியை சேர்ந்த இளம் பெண் ஒருவர் கணவரை பிரிந்து தன்னுடைய மகனுடன் வசித்து வருகிறார். இவருக்கு பிரபல டேட்டிங் ஆப் மூலம் ஜதின் என்ற இளைஞர் அறிமுகம் கிடைக்கிறது. இருவரும் இரண்டு நாட்கள் செயலி மூலம் பேசி இருந்த நிலையில் அவரை தன்னுடைய வீட்டிற்கு அழைக்கிறார்.

ஜதின் தன்னுடைய நண்பர் ஒருவரை அழைத்துக் கொண்டு பெண்ணை பார்க்க அவர் வீட்டிற்கு செல்கிறார். அப்பெண்ணுடன் ஜதின் தனிமையில் அறையில் பேசிக் கொண்டிருக்கும்போது இன்னொரு நண்பர் வீட்டை மகனுடன் சுற்றி பார்த்ததாக கூறப்படுகிறது. பின்னர் இருவரும் அங்கிருந்து சென்றுவிட்டனர்.

அடுத்த சில மணி நேரங்களில் இரவு 10 மணியளவில் அப்பெண்ணிற்கு ஜதினிடம் இருந்து கால் வருகிறது. உன்னை உடனே பார்க்க வேண்டும் என அவர் கூறப் பெண்ணும் வீட்டிற்கு வர கூறுகிறார். வீட்டிற்கு வந்தவர் அப்பெண்ணை டேப்பால் கழுத்து, கைகள், கால்களை கட்டிவிட்டு வீட்டிலிருந்து தங்கச் சங்கிலி, மொபைல் போன் மற்றும் ஐந்தாயிரம் பணத்துடன் அங்கிருந்து தப்பி சென்று விடுகின்றனர்.

இது குறித்து அப்பெண் மே முதல் வாரத்தில் காவல் நிலையத்தில் புகார் கொடுத்திருந்த நிலையில் தற்போது விஜய் கமல் குமார் மற்றும் ராகுல் என இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். தனிமையில் இருக்கும் பெண்களை டேட்டிங் ஆப் மூலம் கண்டறிந்து அவர்களிடம் இருந்து பணத்தை கொள்ளை அடிப்பதே இவர்கள் வேலை என கூறப்படுகிறது.

கொள்ளையடித்தவர்களிடமிருந்து செல்போனிலிருந்து இன்னொரு ஆணையோ பெண்ணையோ வளைத்து அவர்களிடம் இருந்து மீண்டும் முடிந்த அளவு கொள்ளையடித்து அந்த இடத்தை விட்டு தப்பிச் செல்வதை வழக்கமாக வைத்திருந்த நிலையில் தற்போது கைது செய்யப்பட்டுள்ளனர். 

google news
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *