Connect with us

tech news

ரூ. 101-க்கு 100GB டேட்டா.. ஜியோ ஏர்ஃபைபர் சலுகை அறிவிப்பு

Published

on

ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் தனது ஃபிக்சட் வயர்லெஸ் அக்சஸ் சேவையான ஜியோ ஏர்ஃபைபரில் புதிய சலுகைகளை அறிவித்து இருக்கிறது. நாடு முழுக்க கிட்டத்தட்ட 7000 நகரங்கள் மற்றும் டவுன்களில் ஜியோ ஏர்ஃபைபர் சேவை பயன்பாட்டுக்கு வந்துள்ளது.

புதிய சலுகைகள் டேட்டா பூஸ்டர் பிரிவின் கீழ் வழங்கப்படுகிறது. பயனர்கள் ஏற்கனவே உள்ள சலுகை தீர்ந்து போகும் பட்சத்தில் புதிய டேட்டா பூஸ்டர் சலுகைகளில் ரீசார்ஜ் செய்து கொள்ளலாம்.

ஜியோ ஏர்ஃபைபர் டேட்டா பூஸ்டர் சலுகைகள்

ரிலையன்ஸ் ஜியோவின் ஏர்ஃபைபர் டேட்டா பூஸ்டர் சலுகைகளின் விலை ரூ. 101 என துவங்குகிறது. இத்துடன் ரூ. 251 மற்றும் ரூ. 401 விலைகளிலும் கிடைக்கிறது. இந்த மூன்று சலுகைகளிலும் பயனர்கள் ஏற்கனவே ரீசார்ஜ் செய்த சலுகையில் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தாமல் கூடுதல் டேட்டா வழங்குகிறது.

அதன்படி ரூ. 101 சலுகையில் ஏற்கனவே உள்ள சலுகையின் வேலிடிட்டி முடியும் வரை 100GB டேட்டா வழங்கப்படுகிறது. ரூ. 251 சலுகையில் ஏற்கனவே உள்ள சலுகையின் வேலிடிட்டி முடியும் வரை 500GB டேட்டாவும் ரூ. 401 சலுகையில் 1TB வரையிலான டேட்டாவும் வழங்கப்படுகிறது.

சமீபத்தில் தான் ஜியோ மற்றும் பாரதி ஏர்டெல் நிறுவனங்கள் இந்தியா முழுக்க 5ஜி நெட்வொர்க் எண்ணிக்கையை விரிவுப்படுத்தின. இதன் மூலம் அதிவேக 5ஜி கனெக்டிவிட்டி உறுதி செய்யப்படுகிறது.

ஏற்கனவே வெளியான அறிக்கையில், இந்தியாவில் 5ஜி சேவையை பயன்படுத்துவோர் எண்ணிக்கை அதிகமாகி வருவதால், 5ஜி டவுன்லோட் வேகம் சரிவடைந்துள்ளதாக கூறப்பட்டது. நாடு முழுக்க 5ஜி சேவையை விளம்பரப்படுத்தும் பணிகள் மும்முரமாக நடைபெற்று வந்ததே, பயனர் எண்ணிக்கை அதிகரிக்க காரணம் ஆகும்.

google news