Connect with us

india

கார்களுக்கு தேசிய நெடுஞ்சாலைகளில் மாதாந்திர, வருடாந்திர ஃபாஸ்டேக் பாஸ்… புதிய திட்டம்

Published

on

தேசிய நெடுஞ்சாலை சுங்கச்சாவடிகளில் காத்திருப்பு நேரத்தைக் குறைக்கும் வகையில், தனியார் கார்களுக்கு மாதாந்திர மற்றும் வருடாந்திர ஃபாஸ்டேக் பாஸ் கொடுக்கும் திட்டம் குறித்து மத்திய சாலைப்போக்குவரத்துத் துறை அமைச்சகம் பரிசீலித்து வருகிறது.

சுங்கச்சாவடிகள்

நாடு முழுவதும் உள்ள தேசிய நெடுஞ்சாலைகளில் ஆயிரக்கணக்கான சுங்கச் சாவடிகள் உள்ளன. இந்த சுங்கச்சாவடிகளின் முக்கியமான வருமானம் சரக்குகளை ஏற்றிச்செல்லும் வாகனங்களே… மொத்த வருமானத்தில் 75% வருமானம் இதுபோன்ற சரக்கு வாகனங்கள் வாயிலாகவே கிடைக்கிறது. தனியார் கார்கள் போன்றவைகள் மூலம் கிடைப்பது மீதமிருக்கும் 25% மட்டுமே.

இதை அடிப்படையாக வைத்து, சுங்கச் சாவடிகளில் காத்திருப்பு நேரத்தைக் குறைக்க பல்வேறு விஷயங்களை மத்திய சாலைப் போக்குவரத்துத் துறை அமைச்சகம் பரிசீலனை செய்துவருகிறது. அதில் முக்கியமாக, இப்படியான தனியார் கார்களுக்கு மாதாந்திர மற்றும் வருடாந்திர அடிப்படையில் ஃபாஸ்டேக் பாஸ்கள் வழங்குவது குறித்து ஆலோசித்து வருகிறது.

மாதாந்திர மற்றும் வருடாந்திர பாஸ்களைப் பொறுத்தவரை குறிப்பிட்ட இடைவெளியில் அதிகப்படியாக இத்தனை பயணங்களை மேற்கொள்ளலாம் என்கிற விதியும் கொண்டுவரப்பட இருப்பதாகத் தெரிகிறது. இதுகுறித்த ஆய்வுகளையும் மேற்கொள்ள தேசிய நெடுஞ்சாலைத் துறை ஆணையரகம் முடிவு செய்திருக்கிறது.

google news