latest news
12ம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையில் மருத்துவ சீட்… தமிழ்நாட்டு நீட் விலக்கு… சட்டசபையில் அரங்கேறிய தீர்மானம்
தமிழக அரசு சட்டபேரவை கூட்டத்தொடரில் நீட் தேர்வு விலக்கு சட்ட முன்வடிவிற்க்கு உடனடியாக ஒப்புதல் அளித்திட வலியுறுத்தி தீர்மானத்தினை நிறைவேற்றி இருக்கிறது.
இதுகுறித்து முதலமைச்சர் முக ஸ்டாலின் அவையில் பேசிய உரையில் இருந்து, பல்வேறு சுகாதார குறியீடுகள் மற்றும் மருத்துவதுறையில் தமிழகம் முன்மாதிரியாக திகழ்ந்து வருகிறது. பல ஆண்டுகளாக பின்பற்று வந்த மருத்துவ சேர்க்கை திட்டம் தான் அதற்கு காரணமாக அமைந்தது.
முனைவர் அனந்தகிருஷ்ணன் குழுவின் பரிந்துரையின் பேரில் மருத்துவம் உள்ளிட்ட பல்வேறு நுழைவுதேர்வுகளை ரத்து செய்து உத்தரவிட்டவர் கலைஞர். பள்ளி மதிப்பெண் மூலம் எல்லாருக்கும் சம உரிமையில் மேற்படிப்பிற்கான சேர்க்கையை தமிழ்நாடு பின்பற்றி வந்தது. ஆனால் 2017ம் ஆண்டு ஒன்றிய அரசு நீட் தேர்வை அறிவித்தது.
அதில் இருந்து ஏழை, எளிய மாணவர்களுக்கு நீட் தேர்வு என்பது எட்டாக்கனியாக மாறி இருக்கிறது. இதனாலே அதை அறிமுகப்படுத்தியதில் இருந்து எதிர்த்து வருகிறோம். தொடர்ந்து பல முறைகேடுகளுக்கு வழிவகுக்கும் நீட் தேர்வை கைவிட தேசிய மருத்துவ ஆணையத்தில் தேவையான மாற்றங்களை ஒன்றிய அரசு செய்ய தமிழக சட்டசபையில் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இதையடுத்து பேரவை தலைவர் முதல்வரின் தனி தீர்மானம் பேரவை முடிவுக்கு விடப்படுகிறது என அறிவித்தார். அதையடுத்து அவையில் அனுமதி கிடைத்த பின்னர் நீட் விலக்கு தீர்மானம் ஒரு மனதாக நிறைவேறியதாக அறிவிக்கப்பட்டது.