india
நீதிமன்ற உத்தரவுபடி நடந்த நீட் மறுத்தேர்வு ரிசல்ட் வெளியீடு… மிஸ்ஸான மாணவர்கள் இத்தனை பேரா?
நீட் தேர்வில் நேர பிரச்னை காரணமாக 1563 மாணவர்களுக்கு வழங்கப்பட்ட கருணை மதிப்பெண் ரத்து செய்யப்பட்ட நிலையில் அவர்களுக்கு நடந்த மறுத்தேர்வு முடிவுகள் வெளியாகி இருக்கிறது.
மருத்துவ கலந்தாய்வுக்கு தேசிய அளவில் தகுதி தேர்வாக நீட் நடத்தப்பட்டு வருகிறது. ஆனால் இந்த வருடத்தின் நீட் ரிசல்ட் பல குழப்பங்களை கொண்டு வந்தது. ஒரு தேர்வு மையத்தில் தேர்வு எழுதியவர்கள் முழு மதிப்பெண் பெற்றது. மைனஸ் மார்க்கை கொண்ட நீட் தேர்வில் ஒரு கேள்வியை விட்டால் நான்கு மதிப்பெண், தவறாக எழுதினால் ஐந்து மதிப்பெண் குறையும்.
இந்நிலையில், ரிசல்ட்டில் இரண்டாம் மதிப்பெண் 719ஆக இருந்ததாக என பல சர்ச்சைகள் எழுந்தது. இதற்கு தேசிய தேர்வுகள் முகமை, தேர்வறையில் சில மாணவர்களுக்கு நேர பிரச்னை இருந்ததால் அவர்களுக்கு கருணை மதிப்பெண் வழங்கப்பட்டதாக நீதிமன்றத்தில் தொடுக்கப்பட்ட வழக்கில் வாதிட்டது.
இதையடுத்து, கருணை மதிப்பெண் வழங்கிய மாணவர்களுக்கு அதை ரத்து செய்து மீண்டும் தேர்வு நடத்தி உடனே ரிசல்ட்டை வெளியிட உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. அந்தவகையில், ஜூன் 23ந் தேதி நீட் கருணை மதிப்பெண் வாங்கியவர்களுக்கு மறுத்தேர்வு நடத்தப்பட்டது. இதில் கலந்துக்கொள்ளாத மாணவர்களுக்கு அவர்களின் பழைய மதிப்பெண்ணே கணக்கில் கொள்ளப்படும் எனக் கூறப்பட்டது.
இதை தொடர்ந்து 1563 மாணவர்களுக்கு நடந்த தேர்வில் 813 பேர் மட்டுமே எழுதினர். இந்நிலையில், அந்த தேர்வின் ரிசல்ட் வெளியாகி இருக்கிறது. https://exams.nta.ac.in/NEET என்ற லிங்கில் ரிசல்ட் முடிவுகளை பார்க்கலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. விரைவில் கவுன்சிலிங்கும் தொடங்கும் எனவும் தகவல்கள் தெரிவிக்கிறது.
இதையும் படிங்க: ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்குள் மீண்டும் தினேஷ் கார்த்திக்… வெளியான ஆச்சரிய அறிவிப்பு..