india
திரும்ப பெறப்பட்ட 2000 ரூபாய் நோட்டுகள்… ஆனா இன்னும் இத்தனை கோடி வரவில்லையாம்… ரிசர்வ் வங்கி அதிர்ச்சி
இந்திய மக்கள் ஒரே இரவில் கலங்கி நின்றது பணமதிப்பிழப்பு நடவடிக்கையின் போது தான். புழக்கத்தில் இருந்த 500 மற்றும் 1000 நோட்டுகள் செல்லாது என பிரதமர் மோடி அறிவித்தார். இதையடுத்து 2000 நோட்டுகளை அறிமுகம் செய்து வைத்தனர்.
அந்த நோட்டில் பல வியூகங்கள் இருப்பதாகவும், சிப் இருப்பதாகவும் பலர் கிசுகிசுத்தனர். இதனை தொடர்ந்து பிங்க் கலரில் 2000 நோட்டுகள் புழக்கத்துக்கு வந்தது. வங்கிகள் என பல இடங்களில் இருந்த 2000 நோட் சில நாட்களிலேயே காணாமல் போனது. ஒரு கட்டத்தில் மத்திய அரசே 2023ம் ஆண்டு மே19ந் தேதி 2000 நோட்டுகளை திரும்ப பெறுவதாக அறிவித்தது.
பொதுமக்கள் தங்களிடம் இருந்த 2000 நோட்டுகளை வங்கியில் கொடுத்து மாற்றிக்கொள்ளலாம் என்றும் அறிவிப்புகள் வந்தது. இதையடுத்து மக்களும் நோட்டுகளை தொடர்ந்து மாற்றிவந்தனர். இந்நிலையில் 97.87 சதவீத 2000 நோட்டுகள் திரும்பிவிட்டது என ரிசர்வ் வங்கி அறிவித்து இருக்கிறது.
இருந்தும், 7,581 கோடி 2000 நோட்டுகள் இன்னமும் திரும்பவில்லை என தெரிவித்து இருக்கிறது. அக்டோபர் 7, 2023ம் ஆண்டு வரை எல்லா கிளைகளிலும் பணத்தினை மாற்ற வசதி அமைக்கப்பட்டது. தற்போது ரிசர்வ் வங்கியின் 19 கிளைகள் மட்டுமே 2000 ரூபாயை மாற்ற முடியும் எனவும் தகவல்கள் தெரிவிக்கிறது. ரிசர்வ் வங்கி பணத்தினை பெற்றுக்கொண்டு உரியவர்களின் வங்கி கணக்கில் டெபாசிட் செய்யும் வசதியும் அமைக்கப்பட்டுள்ளது.