Connect with us

latest news

நான் முதல்வன் திட்டம்.. இதுவரை 25,000 மாணவர்களுக்கு வேலை.. 8 லட்சம் வரை சம்பளம்..!

Published

on

நான் முதல்வன் திட்டத்தின் கீழ் இதுவரை 25 ஆயிரம் மாணவர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைத்துள்ளதாக தகவல் வெளியாகி இருக்கின்றது.

தமிழக அரசு சார்பாக நான் முதல்வன் என்ற திட்டத்தின் மூலமாக பாலிடெக்னிக் கல்லூரிகளை சேர்ந்த மாணவர்களுக்கு பன்னாட்டு மற்றும் உள்நாட்டு நிறுவனங்களில் வேலை வாங்கிக் கொடுப்பதற்கு அரசு உதவி செய்து வருகின்றது. கடந்த ஜூன் 18ஆம் தேதி நிலவரப்படி தமிழ்நாடு முழுவதும் இருக்கும் பாலிடெக்னிக் கல்லூரியை சேர்ந்த 25 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு மாநில அரசின் நான் முதல்வன் திட்டத்தின் கீழ் பல துறைகளில் வேலை வாய்ப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.

நடப்பாண்டில் தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகம் சார்பாக ஓலோ எலக்ட்ரிக் நிறுவனம் மற்றும் எலக்ட்ரிக் வாகன ஆலைகளில் பாலிடெக்னிக் மாணவர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைத்துள்ளது. அதைத்தொடர்ந்து  Accenture, Amazon, Ashok Leyland, BOSCH, Caterpiller India, Daikin, போர்டு, ஹெச்.சி.எல் டெக் மற்றும் எல் அண்ட் டி போன்ற நிறுவனங்களும் பாலிடெக்னிக் மாணவர்களை வேலைக்கு அமர்த்தி இருக்கிறார்கள்.

அது மட்டுமில்லாமல் இவர்களுக்கு ஆண்டுக்கு 2 லட்சம் முதல் 8 லட்சம் வரை சம்பளமாகவும் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதுவரை 252 கல்லூரிகளில் நான் முதல்வன் வேலை வாய்ப்பு திட்டத்தில் பங்கேற்று இருக்கின்றனர். இதன் மூலமாக இந்த ஆண்டில் இறுதி ஆண்டு படித்து வரும் 58 ஆயிரம் மாணவர்களுக்கு வேலை வாய்ப்புக்கான நடைமுறை தொடரும் என்று கல்வித்துறை அதிகாரிகள் அறிவித்திருக்கிறார்கள்.

google news
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *