india
ஜார்க்கண்ட் முதல்வர் சம்பாய் சோரன் ராஜினாமா!. ஆட்சி அமைக்க உரிமை கோரினார் ஹேமந்த் சோரன்..
ஜார்க்கண்ட் மாநிலத்தில் முதல்வர் சம்பாய் சோரன் தனது பதவியை ராஜினாமா செய்ததை அடுத்து முக்தி மோர்ச்சா கட்சியின் தலைவர் ஹேமந்த் சோரன் ஆட்சி அமைக்க உரிமை கோரி இருக்கிறார்.
ஜார்க்கண்ட் மாநிலத்தில் முதல்வர் பதவியில் இருந்தவர் சம்பாய் சோரன். இவர் ராஞ்சியில் உள்ள ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணனை சந்தித்து இன்று தனது ராஜினாமா கடிதத்தை கொடுத்தார். இதைத்தொடர்ந்து ஆளுனரை சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரி இருக்கிறார் ஹேமந்த் சோரன்.
சட்ட விரோத பணிவர்த்தனை வழக்கில் சமீபத்தில் ஜாமினில் வெளிவந்தார் ஹேமந்த் சோரன் மீண்டும் ஜார்க்கண்டின் முதல்வராக மாறவிருக்கிறார். தலைநகர் ராஞ்சியில் ஜார்க்கண்ட முக்தி மோர்ச்சா மற்றும் கூட்டணி கட்சி தலைவர்கள் மேற்கொண்ட ஆலோசனை கூட்டத்தில் ஹேமந்த் சோரனை முதல்வர் பதவியில் அமர வைப்பது என முடிவு செய்யப்பட்டிருக்கிறது.
செய்தியாளர்களிடம் பேசிய சம்பயி சோரன் ‘ கடந்த சில நாட்கள் முதல்வர் பதவியில் இருந்ததால் மாநில நிர்வாக பொறுப்புகளை கவனித்து வந்தேன். தற்போது ஹேமந்த் சோரன் திரும்பி வந்திருப்பதால் கூட்டணி கட்சி தலைவர்கள் பேசி இந்த முடிவை எடுத்திருக்கிறோம். எனவே, நான் முதல்வர் பதவியை ராஜினாமா செய்திருக்கிறேன்’ என கூறினார்.