Cricket
15 ஆண்டுகளில் முதல்முறை.. ரோகித் பற்றி மனம்திறந்த விராட் கோலி
டி20 உலகக் கோப்பை தொடரை வென்ற இந்திய அணி வீரர்களுக்கு மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் பாராட்டு விழா நடத்தப்பட்டது. முன்னதாக டெல்லியில் இருந்து விமானம் மூலம் மும்பை வந்த இந்திய அணி வீரர்களுக்கு ஆரவாரமான வரவேற்பு அளிக்கப்பட்டது. வீரர்கள் வந்த விமானத்திற்கு ரோகித், விராட் பெயர்களை குறிக்கும் பெயர் வைத்து அழைக்கப்பட்டது.
விமானம் தரையிறங்கியதும் இந்திய தேசிய கொடி வைக்கப்பட்ட வாகனங்கள் மூலம் விமானத்திற்கு வரவேற்பு அளிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து விமானத்தின் மீது இருபுறமும் இருந்து தண்ணீர் பீய்ச்சி அடிக்கப்பட்டது. இதன் பிறகு மெரைன் டிரைவ் வந்த இந்திய அணி வீரர்கள் திறந்தவெளி வாகனத்தில் நகர்வலம் வந்தனர்.
கோப்பையுடன் நாடு திரும்பிய வீரர்களை காணவும், வெற்றி கொண்டாட்டத்தில் கலந்து கொள்ளவும் ஆயிரக்கணக்கான ரசிகர்கள் மெரைவ் டிரைவ் மற்றும் மும்பை வான்கேட மைதானத்தில் குவிந்தனர். நகர்வலம் முடித்துக் கொண்டு வான்கேட மைதானம் வந்த இந்திய அணி வீரர்களுக்கு பாராட்டு விழா நடைபெற்றது. அந்த விழாவில் பிசிசிஐ சார்பில் இந்திய அணிக்கு அறிவிக்கப்பட்ட ரூ. 125 கோடி பரிசுத் தொகை வழங்கப்பட்டது.
இதைத் தொடர்ந்து நிகழ்ச்சியில் பேசிய விராட் கோலி, 15 ஆண்டுகளில் முதல் முறையாக ரோகித் சர்மாவை அதிக எமோஷனலாக பார்த்தேன். கிங்ஸ்டன் ஓவல் மைதானத்தின் படிகளில் ஏறும் போது அவரும் அழுதார், நானும் அழுதுவிட்டேன், என்று தெரிவித்தார்.
எனது 21-வது வயதில் இதே மைதானத்தில் வைத்து 22 ஆண்டுகளாக உலகக் கோப்பையை வெல்ல வேண்டும் என்ற கனவோடு போராடிய சச்சின் டெண்டுல்கரை தோள்களில் சுமப்பது சரியானதாக இருக்கும் என்று கூறினேன். தற்போது என் 35-வது வயதில் நானும், எனது கேப்டனும் இந்த கனவை 15 ஆண்டுகள் சுமந்து கோப்பையை மீண்டும் தாயகம் கொண்டுவந்துள்ளோம், என்றார்.