Connect with us

india

பிரதமரின் வீடு கட்டும் திட்டம்… காச வாங்கிட்டு காதலருடன் கம்பி நீட்டிய மனைவிகள்… விசாரணையில் அதிர்ச்சி…!

Published

on

பிரதமரின் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் முதல் தவணையான 40 ஆயிரம் பணத்தை பெற்றுக்கொண்டு திருமணமான பெண்கள் காதலர்களுடன் ஓட்டம் பிடித்துள்ளனர்.

பிரதமரின் வீடு வழங்கும் திட்டத்தின் மூலம் இந்தியாவில் இருக்கும் பல மக்களுக்கு அதுவும் வீடு இல்லாதவர்களுக்கு பண உதவி செய்யப்படுகின்றது. இந்த திட்டத்தின் கீழ் வீடு கட்டுவதற்கு 2.5  லட்சம் ரூபாய் வரை மத்திய அரசு பயனாளர்களுக்கு வழங்கி வருகின்றது. இந்தியா முழுவதும் இந்த திட்டத்தால் பல மக்கள் பயனடைந்து இருக்கிறார்கள்.

இந்நிலையில் உத்தர பிரதேசத்தில் இந்த திட்டத்தை பலரும் தவறாக பயன்படுத்தி வருவதாக புகார் எழுந்தது. இது தொடர்பாக விசாரணை செய்ததில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. உத்தரபிரதேசத்தில் திருமணமான 11 பெண்கள் பிரதமரின் வீடு கட்டும் திட்டத்தின் மூலம் முதல் தவணை பணத்தை பெற்றுக்கொண்டு தங்களது காதலர்களுடன் ஓடிப் போயிருக்கிறார்கள்.

இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கின்றது. உத்திரபிரதேச மாநிலம் மகாராஜ்கட் மாவட்டத்தில் இந்த சம்பவம் அரங்கேறி இருக்கின்றது. இந்த மாவட்டத்தில் மட்டும் 2,350 பயனாளர்களுக்கு வீடு கட்டும் திட்டத்தின் கீழ் பணம் வழங்கப்பட்டுள்ள நிலையில் அதில் 11 பெண்கள் முதல் தவணையாக 40 ஆயிரம் பணத்தை பெற்றுக்கொண்டு தங்களின் காதலர்களுடன் தப்பி ஓடி இருக்கிறார்கள். இந்த விவகாரத்தை தொடர்ந்து அந்த மாவட்டத்தில் இரண்டாம் தவணை பணம் கொடுப்பதை மத்திய அரசு நிறுத்தி வைத்திருக்கின்றது.

google news