latest news
காவல் ஆணையரைத் தொடர்ந்து… 18 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்… தமிழக அரசு அதிரடி…!
தமிழகம் முழுவதும் 18 ஐபிஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
சென்னை மாநகர சட்ட ஒழுங்கு கூடுதல் ஆணையரான அஸ்ரா கர்க் மாற்றப்பட்டு அவருக்கு பதிலாக நரேந்திரன் நாயர் நியமனம் செய்யப்பட்டுள்ளார். சென்னை மாநகர சட்ட ஒழுங்கு கூடுதல் ஆணையர் பிரேம் ஆனந்த் சிங்ஹா மாற்றப்பட்டு அந்த இடத்திற்கு கண்ணன் நியமனம் செய்யப்பட்டுள்ளார். தாம்பரம் மாநகர காவல் ஆணையர் அமல்ராஜ் மாற்றப்பட்டு அவருக்கு பதிலாக அபின் தினேஷ் நியமனம் செய்யப்பட்டு இருக்கின்றார்.
வடக்கு மண்டல ஐஜி நரேந்திரன் நாயர் மாற்றப்பட்டு அந்த பொறுப்புக்கு அஸ்ரா கர்க் நியமனம் செய்யப்பட்டிருக்கின்றன. ஐஜி நரேந்திர நாயர் நாயருக்கு பதிலாக நாயர் சென்னை வடக்கு கூடுதல் ஆணையராக நியமனம் செய்யப்பட்டு இருக்கின்றார். தெற்கு மண்டல ஐஜி கண்ணன் மாற்றப்பட்டு பிரேம் ஆனந்த் சின்ஹா நியமனம் செய்யப்பட்டு இருக்கின்றார். தாம்பரம் காவல் ஆணையர் அமல்ராஜ் மதுவிலக்கு அமலாக்க துறைக்கு கூடுதல் டிஜிபியாக மாற்றம் செய்யப்பட்டு இருக்கின்றார்.
கள்ளக்குறிச்சி சம்பவத்தால் காத்திருப்பு பட்டியலில் இருந்த மகேஷ் குமார் அகர்வால் தற்போது ஆயுதப்படை கூடுதல் டிஜிபியாக பணி நியமனம் செய்யப்பட்டு இருக்கின்றார். சிபிசிஐடி ஐஜி அன்பு, சிபிசிஐடி கூடுதல் டிஜிபிக்கான பொறுப்புகளையும் கவனிக்க இருக்கின்றார். ஆம்ஸ்ட்ராங் படுகொலைக்கு பிறகு முதலாவதாக சென்னை காவல் ஆணையர் சந்திப் ராய் ரத்தோர் மாற்றப்பட்டு அருண் நியமிக்கப்பட்ட நிலையில் தொடர்ந்து 18 ஐஏஎஸ் ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டு இருக்கிறார்கள். தற்போது சந்திப் ராய் ரத்தோர் காவலர் பயிற்சி பள்ளி இயக்குனராக நியமிக்கப்பட்டிருக்கின்றார்.