அப்பாவி உயிர்கள் பலியாவதை ஏற்க முடியாது – புடினை சாடினாரா மோடி?!

0
48
மோடி- புடின்
மோடி- புடின்

ரஷ்ய அதிபர் புடினுடனான சந்திப்பு முடிந்து ஒரு நாளே ஆன நிலையில், இது போருக்கான நேரம் அல்ல; அப்பாவி உயிர்கள் பலியாவதை ஏற்க முடியாது என உக்ரைன் போர் குறித்து பிரதமர் மோடி பேசியிருக்கிறார்.

ரஷ்ய பயணத்தை முடித்துவிட்டு ஆஸ்திரிய தலைநகர் வியன்னா சென்றடைந்த பிரதமர் மோடி, அங்கு அந்நாட்டு அதிபர் கார்ல் நெஹாம்மரை சந்தித்து இருநாட்டு உறவுகள் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.

பேச்சுவார்த்தைக்குப் பின் பேசிய பிரதமர் மோடி, `தற்போதைய சூழலில் உலகம் முழுவதும் ஏற்பட்டிருக்கும் பல்வேறு பிரச்னைகள் குறித்து நானும் அதிபர் நெஹாம்மரும் விவாதித்தோம். உக்ரைன் போர், மேற்கு ஆசியாவில் ஏற்பட்டிருக்கும் சூழல் குறித்தும் பேசினோம். நான் ஏற்கனவே சொன்னதுபோல இது போருக்கான நேரம் அல்ல. போர்க்களத்தில் பிரச்னைகளைத் தீர்க்க முடியாது. அப்பாவி உயிர்கள் எங்கு பலியானாலும் அதை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது’’ என்று தெரிவித்தார்.

ஆஸ்திரியாவும் இந்தியாவும் இருநாடுகள் உறவுகள் மேம்பாடு குறித்தும் அமைதி குறித்தும் பேச்சுவார்த்தை நடத்தின. இந்தப் பேச்சுவார்த்தை திருப்திகரமாக அமைந்ததாகவும் பிரதமர் மோடி குறிப்பிட்டார். 41 ஆண்டுகளுக்குப் பின் ஆஸ்திரியா சென்றிருக்கும் இந்தியப் பிரதமர் என்கிற பெருமை பெற்றிருக்கும் மோடி, நாட்டோவில் உறுப்பினர் அல்லாத ஐரோப்பிய நாட்டுத் தலைவருடனான சந்திப்புக்குப் பின் ரஷ்யாவின் நடவடிக்கைகளை சுட்டிக் காட்டிப் பேசியிருக்கிறார்.

google news

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here