india
வேலை நேரத்தில் கேண்டி கிரஷ்… வீட்டுப்பாடத்தினை வைத்தே ஆசிரியைக்கு வைக்கப்பட்ட செக்!…
அரசு பள்ளிகளில் பெரும்பாலும் அதிகாரிகள் திடீர் ஆய்விற்கு வருவது இல்லை. அவர்கள் வர இருப்பது முன்கூட்டியே தெரிவிக்கப்பட்டு விடுவதால் தவறு செய்யும் ஆசிரியர்கள் குறித்த தகவல்கள் பெரிதாக வெளிவருவதில்லை. ஆனால் சொல்லாமல் கொள்ளாமல் ஒரு பள்ளிக்கு சென்று ஆசிரியை கையும் களவுமாக பிடித்திருக்கிறார் மாவட்ட நீதிபதி.
உத்திர பிரதேசம் மாநிலத்தின் சம்பல் மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளிக்கு மாவட்ட நீதிபதி ராஜேந்திர பன்சியா சென்று இருக்கிறார். இதைத்தொடர்ந்து அப்பள்ளி மாணவர்களின் வீட்டுப்பாடம் நோட்டை வாங்கி பார்க்கும்போது முதல் பக்கத்திலேயே தவறு இருந்திருக்கிறது. அதை ஆசிரியை கவனிக்காமல் திருத்தி இருக்கிறார்.
இப்படி அவர் சோதனையிட்ட ஆறு மாணவர்கள் நோட்டில் இருந்து மட்டுமே 95க்கும் அதிகமான தவறுகள் இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சியானவர் உதவி ஆசிரியை பிரியம் கோயலின் மொபைலை வாங்கி சோதனை செய்து இருக்கிறார். இதில் அந்த ஆசிரியை வகுப்பு நேரத்தில் இரண்டு மணி நேரம் கேண்டி க்ரஷ் கேம் விளையாடியது தெரிந்தது.
இதை எடுத்து இப்பிரச்சினையை மாநில கல்வித் துறைக்கு எடுத்துச் சென்ற நீதிபதி தன்னுடைய ஆதாரங்களையும் வழங்கியிருக்கிறார். இதனை அடுத்து ஆசிரியை பிரியம் கோயில் உடனே சஸ்பெண்ட் செய்யப்பட்டிருக்கிறார். இது குறித்து பேசிய நீதிபதி, மொபைல் போன்கள் பயன்படுத்துவது தவறில்லை. ஆனால் பள்ளி நேரத்தில் பொழுதுபோக்காக பயன்படுத்துவது தவறு எனவும் குறிப்பிட்டு இருக்கிறார்.