மதுரையில் 2 கோடிக்கு கடத்தப்பட்ட பள்ளி மாணவன்… பயப்படாமல் தாய் செயலால் மீட்பு!

0
50

கடத்தல் சம்பவத்தில் பெரும்பாலும் கடத்தப்பட்டவர் கொடுக்கும் எச்சரிக்கைகளை பாதிக்கப்பட்டவர்கள் பயத்தில் செய்வதுதான் வழக்கம். ஆனால் மதுரையை சேர்ந்த துணிச்சலான தாய் ஒருவர் செய்த செயலால் அவரது மகன் விரைவாக மீட்கப்பட்டிருக்கிறார்.

மதுரை சேர்ந்த மைதிலி என்பவருக்கு ஏழாவது படிக்கும் மகன் ஒருவர் இருக்கிறார். இவர் அப்பகுதியில் இருக்கும் பள்ளிக்கு தினமும் ஆட்டோவில் சென்று வருவது வழக்கம். இந்நிலையில் இன்று அம்மாணவரை ஆட்டோ ஓட்டுநருடன் கடத்தல் கும்பல் ஒன்று கடத்தி சென்றதாக கூறப்படுகிறது.

அவர்கள் மைதிலிக்கு கால் செய்து உங்களது மகனை கடத்தி விட்டதாகவும் 2 கோடி கொடுத்தால் மட்டுமே அவரை மீட்க முடியும் எனவும் கூறி இருக்கின்றனர். மேலும் காவல்துறையிடம் செல்ல கூடாது என அவர்கள் மிரட்டியும் இருக்கின்றனர்.

இருந்தும் துணிச்சலாக அவர் எஸ் எஸ் காலனி காவல் நிலையத்திற்கு சென்று தன்னுடைய மகன் கடத்தப்பட்ட விஷயத்தை புகாராக கொடுத்திருக்கிறார். இதை எடுத்து அவரது புகார் மீது காவல்துறை அதிகாரி்கள் தீவிர விசாரணையில் இறங்கி இருக்கின்றனர்.

கடத்திய கும்பலை நெருங்கும் நிலையில் தாங்கள் பிடிபட்டு விடுவோமோ என பயந்தவர்கள் அம்மாணவனை நான்கு வழிச்சாலையில் இறக்கிவிட்டு தப்பிச் சென்றதாக கூறப்படுகிறது. கடத்தப்பட்ட மகனை தாயின் துணிச்சலான முடிவாள் அடுத்த மூன்று மணி நேரத்தில் மீட்கப்பட்டுள்ளது அப்பகுதியில் ஆச்சரியத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

google news

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here