india
இனி திருப்பதிக்கு போனா கவலையே இல்லாம ஷாப்பிங் பண்ணலாம்… கடைகளுக்கு தேவஸ்தானம் அதிரடி உத்தரவு…!
திருப்பதியில் உள்ள கடைகளில் விற்பனை செய்யப்படும் பொருட்கள் அதிக விலையில் இருப்பதாக புகார் எழுந்ததை தொடர்ந்து தேவஸ்தான நிர்வாகம் அதிரடி உத்தரவை பிறப்பித்து இருக்கின்றது.
உலகப் புகழ்பெற்ற திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு பல்வேறு நாட்டில் இருந்து நாள்தோறும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்து வருகிறார்கள். வெயில், மழை என எத்தனை பிரச்சனைகள் இருந்தாலும், அதையெல்லாம் பொருட்படுத்தாமல் பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து ஏழுமலையானே தரிசனம் செய்து வருகிறார்கள்.
பக்தர்களின் வசதிக்காக குடிநீர், பால், அன்னதானம் என அனைத்து வசதிகளும் நிர்வாகம் சார்பில் செய்து கொடுக்கப்படுகின்றது. இதே போல் தங்குவதற்கும் இடவசதியை தேவஸ்தான நிர்வாகம் கொடுத்து வருகின்றது. வெளியூர் வெளிமாநிலங்களில் இருந்து வரும் பக்தர்கள் திருமலையில் இயங்கி வரும் கடைகளில் விற்கப்படும் பொருட்களை வாங்குகிறார்கள்.
ஆனால் அந்த கடைகளில் பொருள்கள் அதிக விலையில் விற்பனை செய்து வருவதாக புகார் எழுந்தது. இதையடுத்து தேவஸ்தான நிர்வாகம் தலையிட்டு கடைகளில் அதிரடி சோதனை நடத்திய நிலையில் இனிமேல் திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு தரிசனம் செய்ய வரும் பக்தர்களுக்கு தேவஸ்தான நிர்வாகம் நிர்ணயித்த விலையில் மட்டுமே பொருட்களை விற்பனை செய்ய வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்துள்ளது.
மேலும் இந்த உத்தரவை மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தேவஸ்தான நிர்வாகம் சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. மேலும் தரம் குறைவாக பொருட்களை விற்பனை செய்யப்படும் கடைகளை கண்டுபிடித்து அதிகாரிகள் அபராதம் விதித்திருக்கின்றார்கள். இதைக் கேட்ட திருப்பது செல்லும் பக்தர்கள் நிம்மதி அடைந்துள்ளனர்.