Connect with us

india

சோறு, தண்ணி இல்லாம 2 நாள் லிப்டுக்குள் நோயாளி… மயங்கிய நிலையில் மீட்ட போலீஸ்… கேரளாவில் அதிர்ச்சி சம்பவம்…!

Published

on

சிகிச்சைக்கு சென்ற நோயாளி இரண்டு நாட்கள் லிப்டில் மாட்டிக்கொண்ட சம்பவம் மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கின்றது.

கேரள மாநிலம் திருவனந்தபுரத்தை சேர்ந்தவர் ரவீந்திரன். இவர் அப்பகுதியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் செயலாளர் ஆக இருந்து வருகின்றார். இவருக்கு கடந்த சில நாட்களாக கடுமையான முதுகு வலி இருந்ததால் கடந்த சனிக்கிழமை காலை சிகிச்சைக்காக திருவனந்தபுரத்தில் உள்ள மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு சென்று இருக்கின்றார்.

அங்கு மருத்துவரை சந்தித்த ரவீந்திரன் சில ஆவணங்களை எடுக்க வேண்டும் என்பதற்காக வீட்டிற்கு சென்றிருக்கின்றார். மதிய வேளையில் வீட்டிலிருந்து மீண்டும் மருத்துவமனைக்கு திரும்பிய ரவீந்திரன் தரைத்தளத்திலிருந்து முதல் தளத்திற்கு லிப்ட் வழியாக சென்றிருக்கின்றார். சிறிது நேரத்தில் லிப்ட் பழுதடைந்து நின்றுவிட்டது. இந்த சம்பவத்தின் போது ரவீந்திரனின் போன் கீழே விழுந்து உடைந்து விட்டதால் அவரால் யாருக்கும் தகவல் கொடுக்க முடியவில்லை.

மேலும் அங்கிருந்தவர்கள் யாரையும் உதவிக்கும் அழைக்க முடியவில்லை. லிப்டிலிருந்து அலாரம் பட்டனை அழுத்தியபோதும் அதுவும் வேலை செய்யவில்லை. மருத்துவமனை ஊழியர்கள் லிப்ட் வேலை செய்யவில்லை என்று அதை பயன்படுத்தாமல் அப்படியே விட்டு விட்டனர்.

ரவீந்திரன் வெகு நேரம் ஆகியும் மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பாத காரணத்தால் அவரது குடும்பத்தினர் மருத்துவமனையில் உள்ள போலீசாரிடம் புகார் அளித்த போது அவர்கள் மருத்துவமனை முழுவதும் தேடி பார்த்திருக்கிறார்கள். ஒருவேளை அவர் லிப்டுக்குள் மாட்டிக்கொண்டாரா? என்று சந்தேகித்து லிப்ட் ஆப்ரேட்டரை வரவழைத்து லிப்ட்டை திறந்து பார்த்தபோது தான் மயங்கிய நிலையில் ரவீந்திரன் இருந்திருக்கின்றார் .

இரண்டு நாட்கள் உணவு, தண்ணீர் எதுவும் இல்லாமல் லிப்டில் சிக்கி இருந்ததால் அவருக்கு மயக்கம் ஏற்பட்டுள்ளது. இதற்கு இடையே இந்த சம்பவம் குறித்து மருத்துவமனை விளக்கம் அளிக்க வேண்டும் என்று போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒரு நோயாளி இரண்டு நாட்கள் மருத்துவமனை லிப்டில் சிக்கித் தவித்த சம்பவம் அப்பகுதியில் மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கின்றது.

google news