india
தமிழக மக்களுக்கு திமுக அரசு துரோகம் செய்கிறது…அன்புமணி ராமதாஸ் பளீச் பேட்டி…
தமிழகத்தில் அடுத்தடுத்து கொலை சம்பவங்கள் நடந்து வருவது சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துள்ளதை சுட்டிக்காட்டுகிறது என பாட்டாளி மக்கள் கட்சித் தலைவர் அன்புமணி ராமதாஸ் சொல்கியிருக்கிறார். செய்தியாளர்களை சந்தித்த போது அன்புமணி இதனை கூறியுள்ளார்.
கள்ளக்குறிச்சி விஷசாராய விவகாரத்திற்கு பிறகு விழுப்புரத்தில் விஷசாராயம் அருந்தி பதினோரு பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதை சுட்டிக்காட்டி பேசினார்.
பகுஜன் சமாஜ் கட்சி தமிழக மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை, நாம் தமிழர் கட்சியின் மதுரை வடக்கு துணைச் செயலாளர் கொலை என அடுத்தடுத்து நடந்து வரும் கொலை சம்பவங்கள் தமிழகத்தை ஆட்சி செய்து வரும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஆட்சியின் நிலையை தெளிவாக காட்டி வருவதாக அன்புமணி ராமதாஸ் குற்றம் சாட்டியுள்ளார்.
தமிழகத்தில் தினசரி கொலை நடந்து வருவதாக சொல்லியிருந்தார்.
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு குறித்து பேசிய போது இந்த வழக்கு சிபிஐக்கு மாற்றப்பட வேண்டும் என்றார். எங்கவுண்டரில் கொல்லப்பட்ட திருவேங்கடத்தை கை விலங்கு அணிவிக்காமல் கூட்டிச்சென்றது ஏன் என்றும், அதிகாலை நேரத்தில் அவசர, அவசரமாக விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டதன் மர்மம் என்ன?, இந்த கொலைக்கு பின்னால் யார் யார் எல்லாம் இருக்கிறார்கல் என்பதை சிபிஐ விசாரணை தெளிவு படுத்தும் என்றார்.
அதே போல மது பானங்களை சிறிய அளவிலான பாக்கெட்களில் விற்பனை செய்ய நினைக்கும் தமிழக அரசு இது மாதிரியான புதிய முயற்சிகளை கல்வியை மேம்படுத்துவதிலும், நீர் மேலான்மையிலும் காட்ட வேண்டும் என அறிவுறுத்தினார். ஆட்சிக்கு வந்த பிறகு தமிழக மக்களுக்கு தமிழக அரசு துரோகத்தை நிகழ்த்தி வருகிறது எனவும் பேசியுள்ளார்.